திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் – வெ.அரங்கராசன்
இலக்குவனார் திருவள்ளுவன் 28 June 2015 1 1.0 . நுழைவாயில் எல்லார்க்கும் எல்லாமும் [0582] சொல்ல வேண்டியவற்றை நல்ல வகையில்- வெல்லும் வகையில் சொல்லும் சொல்லாற்றல் மிக்கவர் அருந்திறல் பெருந்தகையர் திருவள்ளுவர். தனிமனிதனுக்கும் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் சொல்ல வேண்டிய இன்றியமையா அனைத்தையும் சொல்லியுள்ளார். அவற்றுள் ஒரு தலைப்பே உலகு தழீஇய பொதுமைச் சிறப்பு மிக்க தலைப்பாகிய ‘வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள்’ என்பது. இத் தலைப்பும், திருவள்ளுவர் எத்துணைப் பெரிய பெருமையும் அருமையும் பொலியும் தொலைநோக்குப் பார்வையர் என்பதைப் புலப்படுத்தும். இனி அவை பற்றி நீடு நினைந்து ஆழச் சிந்திப்பது இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கு. 2.0. பொருளின் இன்றியமையாமை நீர்இன்றி அமையாது உலகு [0120] என்பது போலப், பொருள்இன்றி அமையாது உலகு. பொருள் இல்லார்க்கு இவ்உ...