Posts

Showing posts from January, 2018

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 9

Image
அகரமுதல 223  தை 15 – 21, 2049, சனவரி 28- பிப் .3, 2018 இலக்குவனார் திருவள்ளுவன்         28 சனவரி 2018         கருத்திற்காக.. (வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் :  8 தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – 9 தகையணங்குறுத்தல்   தலைமகன் தலைவியைக் காணுங்கால் அவள் அழகால் உந்தப்பட்டு அதனால் உளம் வேறுபடுதல். அமைதியாக இருந்த ஆடவனின் உள்ளம் பெண்ணின் தோற்றத்தால் வருந்தத் தொடங்குதல். “தகை அணங்குறுத்தல்’  என்றால் “அழகு வருத்தத்தை அடைவித்தல்’  என்பதாகும். தலைவியைக் கண்ட தலைவன் கூறுகின்றான்:                  அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை       மாதர்கொல் மாலும்என் நெஞ்சு              (1081)        அணங்குகொல்=வருத்தும் அழகுத் தெய்வமோ?; ஆய்மயில் கொல்லோ= ஆராய்ந்தெடுக்கப்பட்ட அழகிய மயிலோ?; கனங்...

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 12 – சி.இலக்குவனார்

Image
அகரமுதல 223  தை 15 – 21, 2049, சனவரி 28- பிப் .3, 2018 இலக்குவனார் திருவள்ளுவன்         28 சனவரி 2018         கருத்திற்காக.. ( இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)   11–   தொடர்ச்சி)   இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)   12 5.அரசு நாடு நல்லமைதிபெற்று மக்கள் இன்புற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டில் அரசமுறை சிறந்து விளங்க வேண்டும். நாட்டின் சிறப்பியல்பைக் கூற வந்த திருவள்ளுவர், “ ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயன்இன்றே வேந்து அமைவு இல்லாத நாடு ” ( குறள். 740) என்று திருவாய் மலர்ந்தருளினார். “ நெல்லும் உயிரன்றே ;  நீரும் உயிரன்றே   மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்   அதனால் ,  யானுயிர் என்பதறிகை   வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே ” ( புறநானூறு  186) என்று  மோசிகீரனார்  மொழிந்தருளினார். ஆகவே, சங்கக் காலத்தில் நல்லரசின் இன்றியமையாமையை நாட்டு மக்கள் நன்கு அறிந்திருந்தனர் என்று நாம் தெளித...

திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2 : வெ.அரங்கராசன்

Image
அகரமுதல 223  தை 15 – 21, 2049, சனவரி 28- பிப் .,3,2018 இலக்குவனார் திருவள்ளுவன்         28 சனவரி 2018         கருத்திற்காக.. (திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ.அரங்கராசன் தொடர்ச்சி) திருக்குறள் ,  சங்க இலக்கிய விழுமியங்கள்  – 2/2       6.0. விருந்தோம்பல் என்னும் அருந்திறல் விழுமியம்          அருந்தமிழர்தம் தனிச்சிறப்புக்களுள் ஒன்று விருந்தோம்பல் என்னும் பெருந் திறல் விழுமியம் ஆகும். முற்காலத்தில் முன்பின் தெரியாதவர்களே விருந்தினர்கள் எனப்பட்டனர். இதனைத்  தொல்காப்பியர் ,           விருந்தே தானே புதுவது கிளந்த         யாப்பின் மேற்றே .           [ தொல் . செய் .540]  என்னும் நூற்பாவழி நுவல்கிறார்.        இரவானாலும் பகலானாலும் புதியவர்கள்   இல்லத்திற்குப் பசியோடு ...