காலத்தின் குறள் பெரியார் : 4 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்
(காலத்தின் குறள் பெரியார் : 3 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி)
காலத்தின் குறள் பெரியார்
அதிகாரம் 4. பெரியார் வாழ்த்து.
1.அறியார் வறியார் எளியார்க்(கு) உரியார்
பெரியாரைப் போற்றும் உலகு.
2.அய்யா மொழியும் குறள்போல் உலகுக்குப்
பொய்யா மொழியாம் புகல்.
3.பிறப்பொக்கும் என்றார் சிறப்பினை நம்மை
உரைக்கவைத் தார்பெரி யார்.
4.குளிர்ப்பேச்சா அன்றுநம் அய்யாவின் பேச்சே
ஒளிவீச்(சு) எனநீ உணர்.
5.உண்மையைச் சொல்லத் தயங்கா அவர்குணமே
வன்மையுள் எல்லாம் தலை. 6.சாதி மதங்களை மோதி மிதித்தவர்
நீதி அளக்குமோர் கோல்.
7.பள்ளிப் படிப்பினைத் தாண்டாரைக் கற்றபின்
பல்கலை கற்றார் பலர்.
8.அறிவுடன் ஆராய்ச்சி காணுகின்ற உண்மை
திறமுறச் செய்யுமென் றார்.
9.பிறவிப் புனலலை நீந்து பெரியார்
அறிவின் துணையுடன் தான்
10.துயிலெழச் செய்தவர் தூங்கிவிட்டார் ஆயினும்
தூங்கா(து) அவரறிவு தான்.
(தொடரும்)
ச.ச.வேலரசு (எ) தமிழரசன்:
காலத்தின் குறள் பெரியார்
Comments
Post a Comment