Skip to main content

காலத்தின் குறள் பெரியார் : 2 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

காலத்தின் குறள் பெரியார் : 2 

அதிகாரம் 2. வள்ளுவம் போற்றுதல்


  1. அருளே அறிவே அகத்தூய்மை மூன்றன்
பொருளே பொதுமறை தான்.
  1. பிறப்பால் பிரிவை வளர்ப்பார் மறுத்தே
அறப்பால் பொழியும்முப் பால்.
  1. பொறுப்பாய் இருப்பாய் எனத்தான் உரைக்கப்
பொருட்பால் பொழியும்முப்  பால்.
  1. காதலும் காமமும் சேர்ந்தே இசைந்திட
வாழ்தலைச் சொல்லும்முப் பால்.
  1. மொழிஇனம் நாடென்(று) எதையும் மொழியவில்லை
வள்ளுவம் கொண்டபெரும் மாண்பு.
  1. உறவு மறுத்தல் அறமில்லை ஆண்பெண்
உறவினில் வாழும் உலகு.
  1. யான்எனும் ஆணவம் நீக்கல் துறவென்னும்
தேன்குறள் தேர்ந்துதெளி வோம்.
  1. காட்டில் உறைவதல்ல செய்யும் தவமது
நாட்டை நினைக்கும் நெறி.
  1. ஊருக்(கு) உரைத்தநெறி யன்றுதிரு வள்ளுவம்தான்
பாருக்(கு) உரைத்த நெறி.
10.முப்பாலுக்(கு) அப்பால் எதுவுமில்லை ஒப்புவான்
தப்பாம லேகுறளாய்ந் தான்.

               (தொடரும்)
ச.ச.வேலரசு (எ) தமிழரசன்:
காலத்தின் குறள் பெரியார்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue