கொடுமை செய்வோர் வாழ்கின்றார்! – கெருசோம் செல்லையா
கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!
கொன்று, திருடி, ஏமாற்றி,
கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!.
இன்று இவரைப் பாராட்டி
ஏற்போர் நாட்டில் ஆள்கின்றார்.
அன்று இறைவன் உரைத்திருந்தும்,
அவற்றை மறப்போர் வீழ்கின்றார்.
நன்று எதுவென உணர்பவர்தான்,
நன்மை வழியில் மீள்கின்றார்!
– கெருசோம் செல்லையா
Comments
Post a Comment