ஏழு வண்ணங்கள்


அத்தைநேற்று வீட்டில்
ஆக்கிவைத்த சாம்பார்!
கத்திரிக்காய்! ஊதா!
கண்சிமிட்டு தாம்பார்!
மொட்டைமாடி மேலே
முட்டிநிற்கும் வானம்!
கொட்டுதங்கே நீலம்!
குளிக்கவேண்டும் நானும்!
 – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்
புன்னகைப் பூக்கள் : பக்கம் 37