சிட்டுக்குருவி

பட்டுச் சிறகைப் பலமாய் ஆட்டிப்
பறந்து வருகின்ற
சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு?
 சீக்கிரம் நீசொல்லு!

குட்டி அலகும் குறுகுறு கண்ணும்
கொண்டோர் கிளையமரும்
சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு?
சீக்கிரம் நீசொல்லு!

கொட்டை பிரித்துக் குட்டிப் பழத்தைக்
கொத்தித் தின்கின்ற
சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு?
சீக்கிரம் நீசொல்லு!

நெட்டை மரத்தின் நிழலில் ஒருநாள்
நின்றேன் இளைப்பாற!
சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு?
சீக்கிரம் நீசொல்லு!
 – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்
 புன்னகைப் பூக்கள்  பக்கம் 36