பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 – கருமலைத்தமிழாழன்
அகரமுதல 18 8, வைகாசி 14, 2048 / மே 2 8, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 28 மே 2017 கருத்திற்காக.. (பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 தலைமை வணக்கம் சித்தர்தம் மறுபிறவி ஆனை வாரி சிந்தனையின் தோற்றந்தான் ஆனை வாரி புத்தர்தம் உள்ளந்தான் ஆனை வாரி புதுக்கருத்தை விதைப்பவன்தான் ஆனை வாரி புத்தகங்கள் தோழன்தான் ஆனை வாரி புதுமைகளைப் படைப்பவன்தான் ஆனை வாரி முத்தமிழர் கண்டதமிழ் மருத்து வத்தை முதன்மையென உணர்த்துபவன் ஆனை வாரி ! திருக்குறளைத் தேசியநூல் ...