எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! – நீரை. அத்திப்பூ
எதிர்காலத்தை மகிழ்விப்பாய்!
வங்கியில் கணக்கு வை தம்பீவாழ்க்கையில் உனக்குப் பலம் தம்பீ
எங்கிருந்தாலும் சேமிப்பாய்
எதிர்காலத்தை மகிழ்விப்பாய்!
வீணாய்ச் செலவுகள் செய்யாதே
வெற்றாய்ப் பொழுதைக் கழிக்காதே
தானாய் வருமென நினைக்காதே
தகுதி உயர்த்திட மறக்காதே!
சிறுசிறு துளியே பெருவெள்ளம்
சேர்த்துப் பார்த்தால் அது சொல்லும்
வருமானத்தைப் பெருக்கிடுவாய்
வாழ்வில் இமயப் புகழடைவாய்!
இன்றே தொடங்கிடு சேமிப்பு
இனிமை வாழ்வுடன் பூரிப்பு
நன்றே நினைத்திடு வென்றிடுவாய்
நாளைய தலைமை கொண்டிடுவாய்!
– நீரை. அத்திப்பூ
ஆசிரியர்: தகவல் முத்துகள்
நீர்முளை அஞ்சல 614711
நாகை மாவட்டம்.
பேசி : 9444446350,
மின்னஞ்சல்: kaviathippu@yahoo.co.in
Comments
Post a Comment