Skip to main content

தமிழ் நிலத்தை நாமே ஆள்வோம்! – கோ. நடராசன்

தலைப்பு- நாமே ஆள்வோம், கோ.நடராசன் ; thalaippu_thamizhnialathai_naameaalvozm_go-natarasan

தமிழ் நிலத்தை நாமே ஆள்வோம்!


முந்து தமிழ் மொழி மறந்தான்
முன்னோரின் வழி மறந்தான்
மண்ணின் மரபிழந்தான்
மான மென்றால் எதுவென்றான்-உயிராம்
நீரின் உரிமை இழந்தான்
மண்ணுரிமை பேணுதற்கு
முன்னுரிமை தர மறந்தான் – வள்ளுவன்
போதித்த பொன்னான கருத்திழந்தான்
கடல் கடந்து வணிகம் செய்த
கன்னல் நிகர் மொழி இனத்தான் – இன்று
ஆதி புகழ் மறந்து
அயலான் கால் நக்கி
அடி பணிந்து அழிகின்றான்
இந்து என்றும் இந்தியன் தானென்றும்
திராவிடன் என்றும் தலித்திய னேயென்றும்
தடம் மாறிப் போன என்
தமிழ் உறவே, வா! – இனியேனும்
அடிமை விலங்கொடித்து மீள்வோம்!
மொழி மானம் இனமானம் மீட்டு – இம்
மாப்புகழ் தமிழ் நிலத்தை
நல்லபடி நாமே ஆள்வோம்!
– கோ. நடராசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue