உலக வாழ்த்து – நாமக்கல் கவிஞர்
அகரமுதல
156, புரட்டாசி 30,2047 / அட்டோபர் 16,2016
உலக வாழ்த்து
வாழ்க வாழ்க உலகம் எலாம்
வாழ்க எங்கள் தேசமும்
வாழ்க எங்கள் தமிழகம்
வாழ்க எங்கள் மனை அறம்
வாழ்க மேழிச் செல்வமே
வளர்க நாட்டுக் கைத்தொழில்
வாழ்க எங்கள் வாணிபம்
வாழ்க நல்ல அரசியல்
அன்பு கொண்டு அனைவரும்
அச்சம் இன்றி வாழ்கவே
துன்பம் ஏதும் இன்றியே
துக்கம் யாவும் நீங்கியே
இன்பமான யாவும் எய்தி
இந்த நாட்டில் யாவரும்
தெம்பினோடு தெளிவு பெற்றுத்
தேவர் போற்ற வாழ்குவோம்!
– நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்
Comments
Post a Comment