Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30. முயற்சி யுடைமை

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்
மாணவரியல்

30. முயற்சி யுடைமை

  1. உயர்வுற வுழைக்கு முடற்றொழில் முயற்சி.
உயர்ந்ததை அடைவதற்காக உழைக்கும் உடல் உழைப்பே முயற்சி ஆகும்.
  1. முயற்சி பலவகை யுயற்சி நல்கும்.
முயற்சி பலவகைப் பெருமைகளைக் கொடுக்கும் இயல்பு உடையது.
  1. முயற்சி யூழையு முதுகிடச் செய்யும்.
முயற்சி, வெற்றிக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியடையச் செய்யும்.
  1. முயற்சி யுடையார் மூவுல காள்வார்.
விடாமுயற்சி உடையவர்கள் மூவுலகத்தையும் வென்றுவிடுவார்கள்.
  1. முயற்சி யிலாதா ரிகழ்ச்சி யடைவர்.
முயற்சியின்றி சோம்பலுடன் இருப்பவர்கள் பிறர் பழிக்கும் நிலைக்கு ஆளாவார்கள்.
  1. ஊக்கிய வொன்றனை யுடன்கொளத் துணிக.
நம் மனத்தில் ஆர்வத்தைத் தூண்டிய ஒரு குறிகோளை உடனே அடைய தீர்மானித்தல் வேண்டும்.
297.அதிகவூ றுறாநல் லாற்றின் முயல்க.
அதை அடைய அதிக இடையூறில்லாத (சிரமமில்லாத) நல்ல வழியில் முயற்சி செய்தல் வேண்டும்.
  1. உறுமூ றொழித்தறி வுரங்கொடு தொடர்க.
அந்த முயற்சியில் ஏற்படும் இடையூறுகளை நீக்கி அறிவு மற்றும் ஆற்றலுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
  1. தவறினுந் தாழ்ப்பினுந் தளர்ச்சியெய் தற்க.
முயற்சியில் தோல்வியுற்றாலும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டாலும் நம் மன உறுதியை இழத்தல் கூடாது.
  1. முயற்சியின் விரிமுத னூலினு ளறிக.
முயற்சியினைப்பற்றி விரிவாக முதல் நூலில் இருந்து அறிந்துகொள்ளுதல் வேண்டும்.(முதல் நூல்- திருக்குறள்)
– வ.உ.சிதம்பரனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue