வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.29. ஊக்க முடைமை
அகரமுதல
155, புரட்டாசி 23,2047 / அட்டோபர் 09, 2016
மெய்யறம்
மாணவரியல்
29.ஊக்க முடைமை
- ஊக்க முயர்வுற வுனுமன வெழுச்சி.
- ஊக்க முடைமை யுலகெலாங் கொணரும்.
- ஊக்க மிலாமை யுடையவும் போக்கும்.
- ஊக்க முடையா ருயர்ந்தோ ராவர்.
- ஊக்க மிலாதா ருயிர்க்கும் பிணங்கள்.
286.உயர்ந்தவை யெவையோ வவையெலா முள்ளுக.
உயர்ந்தவை அனைத்தையும் அடைய எண்ண வேண்டும்.
- அவற்றினு ளொன்றை யடைந்திட விரும்புக.
- அதனை யடையு மாறெலா மெண்ணுக.
- ஒவ்வொன் றினுமுறு மூறெலா மெண்ணுக.
290. ஊறொழித் ததையுறு முபாயமுங் கருதுக.
அத்தகைய இடையூறுகளை நீக்கி நம் குறிக்கோளை அடைய உதவும் வழிகளைக் கண்டறிய வேண்டும்.
– வ.உ.சிதம்பரனார்
Comments
Post a Comment