Skip to main content

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல 137, வைகாசி 23, 2047 /சூன் 05,2016

kaalamthoarum-thamizh-heading

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300

  1. மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்து
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 490.3
  1. பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 491.4
  1. செப்பிய வண் தமிழ் மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 495.4
  1. புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப் பொன் மதில் ஆரூர்ப் புறத்தணைந்தார்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 498.4
  1. பால் நிற நீற்றர் பருக்கையானைப் பதிகத் தமிழ் இசைபாடி ஆடித்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 499.3
  1. தங்கள் பிரான் அரசாளும் ஆரூர் தனைப் பணிவு உற்றார் தமிழ் விரகர்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 500.4
  1. சந்த முத்தமிழ் விரகர் ஆம் சண்பையர் தலைவர்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 507.2
  1. செஞ் சொல் வண் தமிழ்த் திருப்பதிகத்து இசை எடுத்து
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 512.1
  1. தங்கும் நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 520.2
  1. பாவரும் தமிழ் இசைப் பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 522.2
  1. வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 530.3
  1. மருவு வாய்மை வண் தமிழ் மாலை அவ்வளவனைச் சிறப்பித்துப்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 532.3
  1. செக்கர் வார் சடை அண்ணலைப் பணிந்து இசைச் செந்தமிழ்த் தொடைபாடி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 537.2
  1. சாற்றிப் பதிகத் தமிழ் மாலை சந்த இசை
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 545.2
  1. செந் தமிழ்ச் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருளச்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 547.2
  1. உரவுத் தமிழ்த் தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கு அரசரோடும்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 561.3
  1. மெய்ப்பொருள்வண் டமிழ்பாடி யருளு” மென்ன
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 581.3
  1. இன் தமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 587.3
  1. தொடைத் தமிழாளி யாரும் தொழுது எழத் தொண்டர் ஆர்த்தார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 588.2
  1. நடைத் தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 588.4
  1. சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழித் தலைவரோடு
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 598.1
  1. பூழியர் தமிழ் நாட்டு உள்ள பொருவில் சீர்ப் பதிகள் எல்லாம்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 601.1
  1. ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ் நாடு உற்ற
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 604.1
  1. நீங்கி வண்தமிழ் நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 608.2
  1. அண்டர் பிரான் கழல் வணங்கி அருந்தமிழ் மா மறை பாடிக்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 622.2
  • இலக்குவனார் திருவள்ளுவன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்