வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 3/3 – முனைவர். ப. பானுமதி
அகரமுதல 140, ஆனி12,2047 / சூன் 26,2016 வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 3/3 – முனைவர். ப. பானுமதி இலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக.. (வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 2/3 தொடர்ச்சி) 3 சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் வரதட்சணைக் கொடுமை, வரதட்சணை கொடுப்பதற்காகவே வேலைக்குப் போகும் பெண்கள் ஆங்காங்கு படுகொலைச் செய்யப்படும் கொடுமை முதலியவற்றைக் கண்டு மனம் கொதிக்கும் இக்கவிஞர் ஆண் என்பதால் கண்ணீர்த் துளிகளுக்கு மாற்றாகக் கவிதைத் துளிகளைச் சிந்தியுள்ளார். அந்தத் துளிகளில், கருவுக்குக் கருவான சமாச்சாரத்தின் கார்காலங்கள் நிசப்தப்பட்டுக் கிடக்கிறது ! பாதம் சுமக்கும் பாதரட்சைகளின் பரதேசி வாழ்வு போல என்று தீண்டாமை என்று ஒதுக்கப்படும் பெண்களின் மாதவிடாய்ச் சிக்கலும் ஒன்று. இதுவரை பெண்கள் மட்டுமே பேசி வந்த இச்சிக்கலைக் கையில் எடுத்துள்ள முதல் ஆண் கவிஞர் இவராகத்தான் இருக்க முடியும். இந்தக் கவிஞரின் இந்தப் போக்கு பெண்...