மாமூலனார் பாடல்கள் 24: சி.இலக்குவனார்
மாமூலனார் பாடல்கள் 24: சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 29 சூன் 2014 கருத்திற்காக.. (ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) “கண்பனி நிறுத்தல் எளிதோ” - தலைவி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் உச பாடல். அகநானூறு 97 பாலை கள்ளி அம்காட்ட புள்ளி அம் பொறிக்கலை வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்குழி கடுமுடை இரவுக் குறும்பு அலற நூறி நிரைபகுத்து இருங்கல் முடுக்கர்த் திற்றிகொண்டும் கொலையில் ஆடவர் போலப் பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து வந்து இருக்கும் அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும் இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறைமகளிரொடு அகவுநர்ப் புரந்த அன்பின் கழல் தொடி நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்; வயலை வேலி வியலூர் அன்ன நின் அலர் மூலையாகம் புலம்பப் பல நினைந்து ஆழேல் என்றி தோழி! யாழ என்? கண்பனி நிறுத்தல் எளிதோ? குரவு மலர்ந்து அற்சிரம் நீ...