Skip to main content

தேடுகிறேன் . . . !


தேடுகிறேன் . . . !

ஓடோடி   உழைத்தமகன்  வாடி   மண்ணில்
உட்கார்ந்தே   தேடுகிறேன்  உள்ளத்தால்  எண்ணி
ஆடிப்   பெருங்காற்றில்  அடிமரமே   வீழ்ந்துவிட்டால்
கூடி   நிழலிலமரக்   கூடுமோ ?
வௌவால்  மாந்தர்கள்   வாழும்தமிழ்  மண்ணில்
வாய்மை   மேட்டிலொரு   தூய்மையாளன்  தோன்றினான் !
காய்மை  மனமில்லாக்   காரணத்தால்  கரைசேரவில்லை
தாய்மை  மனமிருந்ததாலே   தமிழ்க்கரைகண்டார் !
காசுதான்   வாழ்க்கையில்   பேசுமென்றால்   உள்ளம்
கூசும்   தொழில்செய்தே   கூட்டலாம்  செல்வத்தை
மாசில்லாத்   தமிழ்மரபை   மனதில்   கொண்டதால்
ஏசுவாரைப்   புறம்தள்ளி   எந்தமிழ்கொண்டாரே  !
அன்னவர்க்கு   முன்னவரும்  பின்னவரும்   வாழ்வில்
சின்னதாகப்  பயனென்றாலும்  சொன்னதையே   மாற்றும்
கன்னக்கோல்   மாந்தரானார்  கன்னித்தமிழ்  நிலத்தில்
குன்னல்   சேராதிருக்கக்  கொள்கைமாறினரே!
கோலம்  மாறினாலும்  கொண்ட   கொள்கைமாறா
நீளவான்   போலமனதில்  நிலைத்திட்  டார்தமிழை
ஆழஉழுத   தால்அரும்பயன்   ஆக்கிட்டார்;  மண்ணில்
வேழமென  நடைபோட   விழைந்திட்டார் !
கூலங்கள்   சிலஅவரைக்  குப்புற  வீழ்த்துவதற்கே
ஏலம்   போட்டனர்; ஏந்துகாட்டினர்  அரசியலில்
காலத்தின்   தவறால்   கால்தடம்   மாறும்போதே
ஆல்போன்ற   தமிழை  அழிக்கவேஎன்று
உள்ளுணர்ந்த   மகன்  உதறினார்   அரசியலை
தெள்ளுதமிழ்   வளர்ச்சியே  தீந்தமிழ்  மக்களுக்கு
அள்ளக்   குறையாத  அருஞ்செல்வம்   என்றே
துள்ளிநடை   போட்டபெருமகன்  துஞ்சிமறைந்தாரே !
கோட்டமின்றி   தமிழ்வளர்த்த  குன்றமின்று   இருந்தால்
ஆட்டமகள்   அரியணையேறி   அய்யனின்படம்  கிழித்ததும்
தேட்டத்தை   அழித்தவரை   தீயாகச்   சுடுவதற்கு
கோட்டை  நோக்கிப்பாய்ந்து    ஊட்டம்சேர்ப்பாரே !
தேடுகிறேன்   காணவில்லை  வாடுகிறேன்  மனத்தால்
கூடுவிட்டுக்   கூடுபாயும் கொள்கையாளன்  யாரேனும்
ஏடெடுத்து   எந்தமிழ்  வாடாதிருக்க  வாராரோஎனஅவர்
கூடுஎடுத்த   நாளாமின்று    கூவுகிறேன் !
தாக்கத்துடன்
அணுக்கத் தொண்டன் – மா. கந்தையா- செயம்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்