களம் வெல்வாய்!
களம் வெல்வாய்!
அகர முதல இணைய இதழே!
பிற மொழிக்கொலை தடுக்க அறிவு தா! !
கொப்பழிக்கும் எரிமலை தரும் வீரம் நீ!
காற்று துப்பி விழுங்கும் சூறாவளியின் ஈரம் நீ !
எடு! திருவள்ளுவர் போர்க்கருவி எழுத்தாணி உழு!
அகர முதலே! நீ தமிழ் விளையும் காணி !
தொலைந்த மானத்தைத் தோண்டி எடு!
தொலை தூர வானத்தில் தமிழை நடு !
இணையத்தில் தமிழ் வளர்க்கும் முதல் கருவே!
மதுரைத் தமிழ்ச் சங்கம் தாண்டும் உன் தருவே !
பல ஆயிரம் புலவர்களின் முகவரிப்பலகை!
தமிழ் உயர உயிர் தருவோம் உலகிற்குச் சலுகை!
கொத்திச் சதை உண்ணும் பறவையே!
தமிழ்ச் சுவை இருக்கும் எனது இரத்தத்தில் !
நக்கி பிழைக்கும் நரிக் கூட்டமே!
தமிழைத் தொட்டால் உன் தலை தெறிக்கும் மொத்தத்தில் !
உலக மொழிகளை ஆளும் அறிவு உண்டு தமிழுக்கு!
அறிந்தோம் தாயின் தாலாட்டு சத்தத்தில் !
தாய் நிலம் வென்று தமிழை ஆட்சி மொழி ஆக்கி நீ நிமிரும் போது
அருத்தமிருக்கும் தாய் தந்த முத்தத்தில் !
அகர முதல இணைய இதழே! களம் வெல்வாய்!
உலகிற்குத் தமிழை மேலும் உயர்த்த வழி சொல்வாய் !

Comments
Post a Comment