Skip to main content

இணைய இதழ்!



 
 பூத்துக்  குலுங்கும்   பூஞ்சோலை ;  பறிக்கக்
     காத்திருக்கும்   ரோசாமலர்   கவின்தென்ற   லிலாடும்
பார்த்திருக்கும்   பாவையவள்   பக்குவமாய்ப்  பூக்கொய்ய
     சேர்த்திருந்தாள்    மகிழ்வைத்தன்    செம்முகத்தில் !
பறிப்பவர்   இலக்கணம்   பாவைக்குத்   தெரியும்
      ஓரிதழ்     உதிர்ந்தாலும்   ஓர்குறையே ;  அவளுக்கு
இதழ்உதிராப்   பூவேபூவைக்கு   இதயம்நிறை   மகிழ்ச்சி
       இதழ்    நடத்துவதும்   இதற்கொப்பானதே !
இணையஇதழ்   கண்டேன்   இணையில்லாத்  தமிழ்காக்கும்
       கணையாக   விளங்கிய   கால்வழி   நடத்தும்
இணையஇதழ்   என்றும்  அணையாமல்   துலங்க
       திணையளவாய்     வாழ்த்துகிறோம்    தீந்தமிழில் !

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்