தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பேரறிஞர் அண்ணா
- Get link
- X
- Other Apps
நன்று.
மக்கள் அழைப்பதுபோல் அண்ணா என்றே குறிப்பிட்டிருக்கலாம்.
தமிழறிஞர் தலைப்பில் வருவதால் பேரறிஞர் அண்ணாவின் படைப்புச்சிறப்புகளை மேலும் சேர்த்திருக்கலாம். எழுத்துநடை சார்ந்த
மொழிபெயர்ப்பு மூலம் போல் அமைவது கடினம். எனினும், < No Sentence can begin with because, because, because is a conjunction > என்பதை மூலத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில், "எந்தத் தொடரின் தொடக்கத்திலும் அமையாத சொல், 'ஏனென்றால்'; ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச் சொல் " எனக் குறிப்பது சிறப்பாக அமையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
மக்கள் அழைப்பதுபோல் அண்ணா என்றே குறிப்பிட்டிருக்கலாம்.
தமிழறிஞர் தலைப்பில் வருவதால் பேரறிஞர் அண்ணாவின் படைப்புச்சிறப்புகளை மேலும் சேர்த்திருக்கலாம். எழுத்துநடை சார்ந்த
மொழிபெயர்ப்பு மூலம் போல் அமைவது கடினம். எனினும், < No Sentence can begin with because, because, because is a conjunction > என்பதை மூலத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில், "எந்தத் தொடரின் தொடக்கத்திலும் அமையாத சொல், 'ஏனென்றால்'; ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச் சொல் " எனக் குறிப்பது சிறப்பாக அமையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பேரறிஞர் அண்ணாதுரை
தமிழ். ஆங்கில, இந்தி என மும்மொழியிலும்
முத்தாய்ப்பாக பேசுவதிலும், எழுதுவதிலும் முற்போக்கு சீர்திருத்த
வாதியானவர்தான் காஞ்சிபுரம் தந்த தங்க தமிழன் பேரறிஞர் கா.ந. அண்ணாதுரை.
மும்மொழி வித்தகரான இவர் பல முற்போக்கு சீர்திருத்த நாடகங்களையும்
எழுதியும், இயக்கியும் அதில் ஒரு பாத்திரமாக நடித்தும் பெருமை சேர்த்தவர்.
தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனங்கள் எழுதியதன் மூலம் திராவிட
சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியும் வந்தார்.
இளமைக் காலம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் 15, 1909 ஆம் ஆண்டு
நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பமான திரு. நடராசன் மற்றும் பங்காரு
அம்மாளுக்கும் மகனாப் பிறந்தார்.
இவரின் தந்தை ஒருநெசவாளர். தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளர்ந்து
வந்தார். மாண வப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம் புரிந்துகொண்டார்.
அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமக்கையின் பேரக் குழந்தைகளை த்ததெடுத்து
வளர்த்தனர்.
பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வந்த அண்ணாதுரை
குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிகமாக
நிறுத்தி விட்டு நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராகச் சில காலம்
பணிபுரிந்தார்.
கல்வி: 1934 இல் இளங்கலாமானி மேதகைமை (ஆனர்ஸ்) மற்றும் அதனைத்
தொடர்ந்து முதுகலைமானி பொருளியில் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.
ஆசிரியர் பணி:
பட்டப் படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன்
பள்ளியில் ஆறுமாத காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். பிறகு பச்சையப்பன்
உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியர் பணியை
இடைநிறுத்தி பத்திரிக்கைத் துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
பத்திரிக்கை பணி
1937 முதல் 1940 வரை தந்தை பெரியார் அவர்களின் இதழ்களான குடியரசு,
விடுதலை, பகுத்தறிவு போன்ற பத்திரிக்கைகளில் துணை ஆசிரியராகப் பணி
புரிந்தார். அந்த காலகட்டங்களில் க்லகத்தா காய்ச்சல், ரிப்பன் மண்பத்து
மகான்கள், ஓமன் கடற்கரையிலே போன்ற சிறப்புமிக்க கட்டுரைகளை எழுதினார்.
அப்போது நக்கீரன், பரதன், வீரர் எனும் புனைப் பெயர்களில் பல
கட்டுரைகளையும் எழுதினார்.
அரசியலில் நுழைவு: அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு
கொண்டு நீதிக்கட்சியில் 1935 இல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு
நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பொறுப் பேற்றிருந்தார்.
பின்பு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு
ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத்
தொடங்கினார்.(திராவிட நாடு தனி கோரிக்கையை வலியுறுத்தி துவங்கப்பட்டது)
1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம்
செய்தார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.
பெரியாருடன் கருத்து வேறுபாடும் திமுக உருவாக்கமும்:
பெரியாரின் தனித்திராவிட நாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட
வயதில் இளைவரான மணியம்மையாரை பெரியார் மணம் பிரிந்துகொண்டதால் கருத்து
வேறுபாடு கொண்டு, அண்ணாதுரை மற்றும் பெரியாரின் அண்ணன் மகனும் பெரியாரின்
வாரிசு என கருதப்பட்டவரும், திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவருமான
ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து
புதியக் கட்சி துவங்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி (17.10.1949) அன்று
அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கெதிராகப் பல்வேறு போராட்டங்களில், பல்வேறு
காலக்கட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்க தொடங்கினார். இருதியில்
1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்
கொண்டதன் விளைவாக மக்களின் ஆதரவையும் ஆவரும், அவரது கட்சியான திராவிட
முன்னேற்றக் கட்சியும் அபரிவிதமான செல்வாக்கை பெற்றது.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
அறிஞர் அண்ணாதுரை அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும், அவரது
கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார்.
பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான பண்பாடுகளே
இவை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை தனி்ப்பட்டு ஒர் அமைப்புக்குள்
இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதப்படுகின்றது.
கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில்
அரசிலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் அளித்திடும்
மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட
வெறுப்போ, விரோதமோ இல்லாமல் எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப்
பாராட்டும் தன்னை பொது வாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும் என்பது
அண்ணாவின் கொள்கையாகும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம்இந்தியா 1950 இல் அரசிலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு பின்பு இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தன் அங்கீகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1965 இல் அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 27, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை முதல் தளபதியாகப் பொறுப்பேற்று நான்கு மாதம் சிறை தண்டனைப் பெற்றார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடராசன் - தாளமுத்து இருவரின் உயிரிழப்பிற்குப் பிறகு இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரண்டது. அவ்வாண்டின் இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர் 1940 இல் மதராசு ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இநதிக் கல்வியை விலக்கினார்.
இந்தியாவின் ஆட்சி மொழியக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை
இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது. அது பெரும்பாண்மை மக்களால்
பேசப்படுவதால், ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது?
உண்மையில் பெரும்பாண்மையாக இருப்பது எலி தானே அல்லது ஏன் மயில் தேசியப்
பறவையாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் பெரும்பாண்மை பறவை காகம் தானே?
தமிழ்மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும் வரை எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.
இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை
தாய் மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும், இந்தியை
தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப்
பந்தயம் போன்றது என்றார்.
மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை
சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது.
சட்டப்பேரவையில் அண்ணாதுரை
சட்டப்பேரவையில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும்,
ஆளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்ட்டது. அவரின்
பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும்,
கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய
வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.
* மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில்
இருந்து விலகி வி.ஆர். நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார்.
அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்தியப்
பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்கு கொண்டது.
* 1957 இல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டப்பேரவை
தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது. அண்ணாதுரை
காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார்.
திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டப்பேரவைக்குள் நுழைந்தது.
* 1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரஸை அடுத்து
உருவெடுத்திருந்துது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 தொகுதிகளை
வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியை தழுவினார். பின்பு
மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு அண்ணாதுரை மாநிலங்களவை உறுப்பினராக
பணியாற்றினார்.
* 1967 இல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார்.
* 1962 இல் சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சியனரே வியக்கும் விதமாக மிக சாதுர்யமாக
பதில் அளித்தார். பேரவையில் அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத்
தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அண்ணாதுரை
அவர்கள் நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக்
கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி
விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது
உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன்
கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.
மொழிப்புலமை
ஒருமுறை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிசோதிப்பதற்காக அவரிடம்,
"ஏனென்றால்" என்ற வார்த்தையை மூன்று முறை தொடர்ந்து வருகிற மாதிரி
வாக்கியம் கூற முடியுமா? என்ற கேட்டனர். அதற்கு அண்ணாதுரை அவர்கள்,
"No Sentence can begin with because, because, because is a
conjunction" அதாவது எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது.
அவ்வார்த்தையை ஏனென்றால், ஏனென்றால், ஏனென்றால் என்பது ஓர் இணைப்புச் சொல்
என்றார்.
இலக்கியப் பங்களிப்புகள்
அண்ணாதுரை மிகச்சிறந்த சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்.
தமிழில் சிலேடையாக அடுக்கு மொழிகளுடன்., மிக நாகரிகமான முறையில்
அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன்
பேசும் திறனும், எழுத்தாற்றலும் பெற்றவர்.
திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர்
அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி(1948). இதில் முக்கிய
கதாபாத்திரத்தில் கலைவாணர் என.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இதில்
ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இவரின்
மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி(1949) மற்றும் ஓர் இரவு போன்ற நாவல்கள்
திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக
இத்திரைப்படங்கள் திகழ்ந்தன.
இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள்
மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்க பலமாக விளங்கியவர்கள்
டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி, என.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன்,
சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்.
மறைவு
அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய்
தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பிப்ரவரி,
1969 இல் மரணமடைந்தார். அவர் பொடி நுகரும் பழக்கம் உடையவர் இதனால்
புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி, இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார்.
அவரின் இறுதி மரியாதையில் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி
மரியாதை செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம்
செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம்
என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணாவின் பொன்மொழிகள்
"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்"
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம்
பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல,
நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான்
வேண்டும்.
சட்டம் ஓர் இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு; அந்த விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை. (வேலைக்காரி நாடகத்தில்-1945)
அண்ணாதுரையின் முதல் படைப்புகள்
முதல் கட்டுரை - தமிழில் மகளிர் கோட்டம் - 19.03.1931
முதல் கட்டுரை - ஆங்கிலத்தில் MOSCOW mobparade - 1932
முதல் சிறுகதை - கொக்கரக்கோ - 11.02.1934
முதல் கவிதை - காங்கிரஸ் ஊழல் - 09.12.1937
முதல் கடிதம் - பகிரங்க்க் கடிதம் 02.09.1938
முதல் குறும் புதினம் - கோமளத்தின் கோபம் - 07.1939
முதல் புதினம் - வீங்கிய உதடு - 23.03.1940
முதல் நாடகம் - சந்திரோதயம் - 05.06.1943
அண்ணாதுரை புனைப்பெயர்கள்
செளமியன், பரதன், நக்கீரன், வீரன், குறம்போன், துறை, வீனஸ், சமதர்மன்,
ஒற்றன், நீலன், ஆணி, சம்மட்டி, காலன், பேகன், வழிப்பேோக்கன்,
சிறைபுகுந்தோன், குறிப்போன், கொழு, குயில், கீரதர்.
நினைவுச் சின்னங்கள்
* தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை
பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக
மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை
வைக்கப்பட்டுள்ளது.
* அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
* சென்னை மெரினா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர்
அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின்
மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது.
இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப்
புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
* எம். ஜி. ராமச்சந்திரன் திமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி
தொடங்கியபோது அதற்கு அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். சென்னையில் உள்ள
திமுக தலைமைச் செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்று
பெயரிடப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன.
* வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர்
சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல்
சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா
கலையரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள்
திரையிடப்பட்டு வருகின்றன.
* 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
* 2010 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment