Skip to main content

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.17-22

 அகரமுதல




(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3. 11-16  தொடர்ச்சி)

  

இராவண காவியம்

  1. தமிழகக் காண்டம்

4. தலைமக்கட் படலம்

17.    இன்ன போலவே கிழக்குநா டென்னுமவ் விடத்திற்

                 கன்னை போவோ ரின்புடைத் தமிழ்மகன் தன்னை

                 மன்ன னாக்கினன் அன்னனும் வண்டமிழ் வளர்த்தான்

                 இன்ன வன்மர பெழுந்தரே யிசையுடைச் சோழர்.

           18.    ஓகை யோடவர் வானினுங் கொடுமுடி யுயர்ந்த

                 நாகை மாநகர் தனிலினி திருந்துநா ணாளும்

                 ஈகை யோடுசெங் கோலற முதலிய வெவற்றும்

                 வாகை சூடியே வழிவழி பொலிந்தனர் மன்னோ.

19.    நாழி யாலுயிர் தாங்கிடு மக்களை நாளும்

                 வாழ வைத்திடு முணவினிற் குறைவிலா வளத்தாற்

                 சோழ மிக்கவண் விளைந்ததால் முன்னவர் சொன்னார்

                 சோழ மென்றதை யாண்டவ ராயினர் சோழர்.

           20.    இந்த வாறவன் கிழக்குநா டாண்டவ ணிருக்கச்

                 செந்த மிழ்க்குட நாட்டினுக் கோர்தமிழ்த் திருவாய்

                 மைந்த னைத்திரு மன்னனாக் கினனவன் மரபில்

                 வந்த மன்னவ ரேதமிழ் வான்புகழ்ச் சேரர்.

           21.    தெருவி லாடிளஞ் சிறுவர்பந் தெறியவே சிதறி

                 இருவி சும்பிடைப் புகுதர வினப்பகை யென்று

                 வெருவி மாமதி மறைமுடி மேக்குயர் வஞ்சி

                 மருவி யின்பொடு வழிவழி சிறந்தனர் மாதோ.

           22.    மாரி யோவறா வளமுடைத் தாகிய மலையின்

                 சேரல் சூழக நாட்டிடை வாழ்விடஞ் சேரச்

                 சேரல் என்பதை யம்மலை நாட்டொடு சேர்த்துச்

                 சேரம் என்றனர் ஆண்டவ ராயினர் சேரர்.

++

18. ஓகை – உவகை, வாகை – வெற்றி.

++

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்