Skip to main content

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-26

 அகரமுதல




(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20  தொடர்ச்சி)

இராவண காவியம்

தமிழகக் காண்டம்

மக்கட் படலம்

  1. அழுக்கற வெளுத்து வண்ண மாக்குவோர் வண்ணார் பின்னர்

                 மழுக்குற மயிரை நொய்தின் மழிப்பவர் மழிப்பர் வாய்மை

                 ஒழுக்குற வரிதி னோவந் தீட்டுவோ ரோவர் மற்றும்

                 வழக்குறு தொழில்க ளெல்லாம் வகைப்படுத் தப்பேர் பெற்றார்.

  1. பல்வகைப் பறையின் யாழின் பாகுசெய் குழலின் வாயிற்

                 சொல்வகை யமையத் தாளத் தொகையுட னராகம் வாய்ப்ப

                 நல்வகை யிசையுங் கூத்தும் நலம்பட விசைக்க மேலோர்

                 பல்வகைப் பெயரி னோடு பறைப்பொதுப் பெயர்பெற் றாரே.  

  1. பல்வகைப் பறையின் யாழின் பாகுசெய் குழலின் வாயிற்

                 சொல்வகை யமையத் தாளத் தொகையுட னராகம் வாய்ப்ப

                 நல்வகை யிசையுங் கூத்தும் நலம்பட விசைக்க மேலோர்

                 பல்வகைப் பெயரி னோடு பறைப்பொதுப் பெயர்பெற் றாரே.

   24.ஒட்டியோர் நிலைய ராக வுலகநா கரிக மூக்கத்

                 தொட்டவர் கிணறு முன்னர்த் தோட்டியென் றழைக்கப் பட்டார்

                 கட்டிடங் கட்டி நாடு கண்டுநன் குண்டு வாழ

                 வெட்டியோர் காட்டை முன்னர் வெட்டியா ரெனப்பட் டாரே.

  1. ஈங்குசெய் தொழிலி னாலே யினப்பிரி வானா ரன்றி

                 ஆங்கவர் தம்மு ளாண்டா னடிமையாங் கொடுமை யின்றிப்

                 பாங்குறு தொழிலுக் கேற்ற பயனையவ் வவரே யெய்தி

                 ஓங்கிய செல்வத் தாராய் ஒருகுறை யின்றி வாழ்ந்தார்.

  1. இவ்வகைத் தொழிலுக் கேற்ப வினப்பிரி வினராய் வாழ

                 அவ்வகைத் தொழில்செய் வார்நா ளடைவிலத் தொழிலே செய்யும்

                 குவ்வையர்க் குள்ளே கொண்டு கொடுத்துவந் ததனாற் பின்னர்

                 ஒவ்வொரு தொழில்செய் வோரும் ஒவ்வொரு வகுப்பா னாரே.

+++

  1. குவ்வை – கூட்டம்.

+++

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்