Skip to main content

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.11-16

 அகரமுதல




(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10 தொடர்ச்சி)

இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்

4. தலைமக்கட் படலம்

       11.    ஈங்குபல் லாண்டு செல்ல விருந்தமி ழகத்தில் வாழும்

                 ஓங்குநல் லறிவு வாய்ந்த யுயர்தமிழ் மக்க ளெல்லாம்

                 தாங்குநா னிலத்த ராகித் தனித்தனி வாழ்தல் நீத்துத்

                 தேங்குமோர் குடையி னீழற் றிகழ்ந்திட மனக்கொண் டாரே.

மாபெருந் தலைவன்

           12.    தண்டமி ழகத்தை முற்றுந் தனியர சோச்சத் தாழ்வில்

                 திண்டிற லொழுக்க மேன்மை திறம்பிடா நீர்மை மேய

                 தண்டமிழ் மகனைத் தங்கள் தலைவனாக் கொண்டா ரந்தப்

                 பண்டையோன் மரபில் வந்தோர் பாண்டிய ரெனப்பட் டாரே.

                       கலித்துறை

           13.    வென்றி வேலுடை வேந்தனு மணிமுடி வேய்ந்தே

                 அன்று தண்டமி ழகத்தினாப் பண்ணதன் முகம்போல்

                 இன்றி லங்கையந் தீவுதென் மேற்கினி லெழிலோ

                 டன்றி ருந்ததொன் னகரினி லமர்ந்தினி தாண்டான்.

           14.    நானி லத்தவ ரவரவர் முறைப்படி நடக்க

                 மேனி லத்தவர் பொருள்கொடு மிகுபொருள் விடுப்பத்

                 தானி னைத்தது தமிழர்கள் நினைத்ததே தானா

                 தேனி னித்தசெந் தமிழ்வளர்த் தேமுறை சிறந்தான்.

           15.    பின்னர் நாள்பல செல்லவோர் பெருந்தலை மகனும்

                 தன்ன ருந்தலை மகனைமுத் தமிழ்தனி வளர்க்க

                 நன்னர் மேயதென் பாலியாம் பெருவள நாட்டின்

                 மன்ன னாக்கின னன்னனும் வண்டமிழ் வளர்த்தான்.

           16.    பைந்த மிழ்வளர்த் துவக்குமப் பாண்டிய மன்னன்

                 சிந்தை போற்செயல் திருந்தவே முறைசெய்து சிறக்கத்

                 தந்தை தாயினும் அன்புடன் தமிழகம் புரக்கும்

                 எந்தை மாபெருந் தலைவனு மினிதென மகிழ்ந்தான்.

+++

          13. நாப்பண் – நடு.

14. மேனிலன் – மேல்நாடு. பொருள் – சரக்கு.

++++

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்