Skip to main content

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10

 அகரமுதல




(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5 தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம்

3. மக்கட் படலம்

 6. மேழி யானில மேவுயிர்

சூழ வுண்டு தொகுபசி

வீழ வுண்டி விளைக்குவோர்

ஆழி மொய்ம்பின்வே ளாளரே.


7.களவு முற்றிய கற்பினர்

அளவ றிந்தற மாற்றிட

உளம றிந்தவர்க் கோதுவோர்

பளகி லாத்தமிழ்ப் பார்ப்பனர்.  


8. மற்று முள்ள வகுப்பெலாம்

உற்ற வாழ்வுக் குறுதுணை

யிற்றொழிலினி யன்றதாற்

பெற்ற தொழிற் பேரரோ

.

 9. முதலில் வெம்பசி மூளவே

அதனை நீக்குண வாக்கவே

முதன் மு தலின முன் னர்செய்

ததுப யிர்த்தொழி லாகுமே.


 10. பழுதி லாத பயிர்த்தொழில்

பழுதி லாது பயிற்றவே

பழுதி லாத பலதொழில்

பழுதி லாது பயிற்றினர்.

+++

ஐவகைத் துன்பம் – தன்னால், அலுவலாளரால், பகைவரால், கள்வரால், பிற உயிரால் வருவன. நோய் தரும் நச்சுப்புழுக்களும் அடங்கும், 5, கூர்- மிக, கொண்டு கொடுத்தல்-வணிகம். ஈர் இரும்- நனிமிக. 6, ஆழி–தேருருள், மொய்ம்பு -வலி, 7. பளகு-குற்றம்,

+++

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்