Posts

Showing posts from May, 2022

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.17-22

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 June 2022         No Comment ( புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3. 11-16    தொடர்ச்சி )     இராவண காவியம் தமிழகக் காண்டம் 4.  தலைமக்கட் படலம் 17.    இன்ன போலவே கிழக்குநா டென்னுமவ் விடத்திற்                  கன்னை போவோ ரின்புடைத் தமிழ்மகன் தன்னை                  மன்ன னாக்கினன் அன்னனும் வண்டமிழ் வளர்த்தான்                  இன்ன வன்மர பெழுந்தரே யிசையுடைச் சோழர்.            18.    ஓகை யோடவர் வானினுங் கொடுமுடி யுயர்ந்த                  நாகை மாநகர் தனிலினி திருந்த...

பேரறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம் – முன்னுரை

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 June 2022         No Comment குமரிக்கோட்டம் முன்னுரை காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கை யிலேயே, நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்து விடுகின்றன. ‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம். இதிலே காணப்படும் சீறும் தந்தை, வாதிடும் மகன், வசீகர மங்கை,  உரோசம்   நிரம்பிய அண்ணன், இவர்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் காணலாம். பெயர்கள், குழந்தைவேலர் என்றிராது; குமரி என்று இருக்காது. ஆனால், இவ்விதமான நிலைமையிலுள்ளவர்களை, நாட்டிலே காண முடியும். மகன் தலைகால் தெரியாமல் ஆடுகிறான் , சாதி ஆச்சாரத்தைக் கெடுக்கிறான் என்று சீறுகிறார் தந்தை. அவரால், காதல், சாதிக் கட்டுப்பாடுகளை மீறக்கூடிய சக்தி என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடிய வில்லை மகன் அழுதபோதும் சரி, அவன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகுங்கூட நெடுநாட்கள் வரை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை – ஒரு களங்க மற்ற கன்னியின் புன்னகை...

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 49

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         31 May 2022         No Comment (மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  48 தொடர்ச்சி ) குறிஞ்சி மலர் 18 “இப்போதைக்கு என்னை விட்டுவிடு அரவிந்தன். இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் அச்சகத்துக்கு வந்து அடி முதல் நுனி வரையில் எல்லா விவரமும் நானே சொல்லிவிடுகிறேன். திலகர் திடலில் ஆறரை மணிக்குப் பொதுக்கூட்டம். நான் அதில் பேசுகிறேன்” என்று பரபரப்பைக் காட்டிக் கொண்டு அரவிந்தனிடமிருந்து நழுவினான் முருகானந்தம். “இந்தப் பொதுக்கூட்டம், தொழிற்சங்கம், சமூகத்தொண்டு, ஏழைகளின் உதவி நிதிகள் – இவையெல்லாம் இனி என்ன கதியடையப் போகின்றனவோ? நீ காதல் வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டு விட்டாயோ?” என்று அவனைக் கேலி செய்து அனுப்பிவிட்டு மனம் தாங்க முடியாத வியப்புடன் அச்சகத்திற்குச் சென்றான் அரவிந்தன். உண்மையிலேயே இது மிகவும் வியப்புத் தரும் செய்தியாகத்தான் இருந்தது அவனுக்கு. முருகானந்தத்திடம் கிண்டலும் வேடிக்கையுமாகப் பேசி அனுப்பிவிட்டாலும்  பொறுப்புணர்ச்சியோடு நினைத்துப் பார்த்தபோது பயமாகவும் மலைப்பாகவும் இருந்தது அர...

நான் - பாவலர் கருமலைப் பழம் நீ

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 May 2022         No Comment நான் முதுமை என்பது எனக்கில்லை! முனகலும் தவிப்பும் எனக்கில்லை! நோய்கள் குறித்து வருத்தமில்லை! நோதலும் சாதலும் எனக்கில்லை! இளமை இன்றும் மனம் நிறைய இன்னிசைப் பாடித் திரிகின்றேன்! எனக்கும் மேலே உள்ளவனை ஏக்கம் கொண்டு பார்ப்பதில்லை! எனக்கும் கீழே இருப்பவனை ஏளனம் செய்துச் சிரிப்பதில்லை! இதயத் துடிப்பின் உயிர்த்துளியாய் இயற்கை என்போன் இயக்குகிறான்! அன்பும் அறிவும் நிறைந்தோர்கள் அருகில் வாழும் காரணத்தால் ஆசைகள் குறைந்த மனிதன் நான் ! அகந்தை இல்லாக் கவிஞன் நான்! –  பாவலர் கருமலைப் பழம் நீ பேசி – 94444 50295

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.11-16

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 May 2022         No Comment ( புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10 தொடர்ச்சி) இராவண காவியம் 1.  தமிழகக் காண்டம் 4.  தலைமக்கட் படலம்        11.     ஈங்குபல் லாண்டு செல்ல விருந்தமி ழகத்தில் வாழும்                   ஓங்குநல் லறிவு வாய்ந்த யுயர்தமிழ் மக்க ளெல்லாம்                   தாங்குநா னிலத்த ராகித் தனித்தனி வாழ்தல் நீத்துத்                   தேங்குமோர் குடையி னீழற் றிகழ்ந்திட மனக்கொண் டாரே . மாபெருந் தலைவன்            12.    தண்டமி ழகத்தை முற்றுந் தனியர சோச்சத் தாழ்வில்     ...

பீலிபெய் நடுகல் – சொற்கீரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 May 2022         No Comment பீலிபெய் நடுகல் மண்காத்து தன் உயிர் நீத்தவர் பீலிபெய் நடுகல் அல்லது பிறிது உரை பேழ் வாய்ப் பூதம் பேய்க்கதை கூறும் மறை மொழி ஈண்டு என்னிஃது பகரும். பிறப்பும் இறப்பும் அடுக்கிய ஊழ் தனில் இருப்பின் பொறிகிளர் எல்லே எல்லாம் சொல்லிச்செல்லும் மெய்மொழி உணரார் கல்படு சுனை ஒரு நுங்கின் கண் என‌ பளிங்கு வீழ்த்த நிழற்பட்டாங்கு உள்ளம் பாழ்த்து அஞ்சவும் படுமே . –  சொற்கீரன் விளக்க உரை தன் தாய்மண் காக்க உயிர்நீத்தவர் பற்றி மயில் பீலி சூட்டிய அந்த நடுகல் காட்டும் உரைகள் தவிர வேறு வாய்பிளந்த பூதம் பேய்களின் கதைகளா அங்கு இருக்கும்? மந்திரச்சொற்கள் வேறு என்ன இங்கு பகரும்? பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் வருவது விதி என்பதில் யாது பயன்? இப்போது நம்மிடம் இருக்கும் நடப்பு வாழ்க்கை பற்றிச் சுள்ளென்று அந்த சூரியன் சூடு காட்டி சொல்லிச்செல்லும் உண்மையை உணராதவர் ஒரு அச்சத்தில் தோய்ந்து கிடப்பார்கள். சுனையின் நடுவே நீரின் நிழலை பனை நுங்கின் கண்ணீர் என மயங்கி வாடுபவர் போல்...

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 75

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 May 2022         No Comment ( அகல் விளக்கு – மு.வரதராசனார். 74. தொடர்ச்சி ) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி இரவு மூன்று மணிக்கு விழித்தபோது புயல் அடங்கி இருந்தது . மின்னலும் இடியும் களத்தைவிட்டு அகன்று ஓய்ந்திருக்கச் சென்றிருந்தன.  காற்றுத் தோல்வியுற்று அடங்கி எங்கே ஒளிந்திருந்தது. மழையும் களைத்துச் சோர்ந்து விட்டாற்போல் சிறு சிறு தூறலாய் பெய்து கொண்டிருந்தது. எழுந்து போய்ச் சந்திரனைப் பார்த்தேன். பிதற்றாமல் புரளாமல் ஆடாமல் அசையாமல் இருந்தான். நல்ல அமைதியோடு உறங்குகிறான் என்று திரும்பி விட்டேன். மன அமைதி உள்ளபோது உடம்பும் நல்ல அமைதி பெறுவது இயற்கை என்று எண்ணியபடியே மறுபடியும் படுத்து உறங்கிவிட்டேன். காலையில் விழித்தபோது, வழக்கம்போல் சந்திரன் அருட்பா பாடுவது கேட்கும் என்று செவிகள் உற்று கேட்டன. ஒருகால் பாடி முடிந்திருக்கும் என்று எண்ணினேன். சிறிது நேரம் கண் மூடியவாறே படுத்திருந்து எழுந்தேன். சந்திரனிடம் சென்றேன். அவன் வழக்கத்திற்கு மாறாக, கதிரவன் வந்த பிறகும் படுத்திருந...