Skip to main content

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75

 அகரமுதல




(இராவண காவியம்: 1.2.66-70 தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம் 

2. தமிழகப் படலம்

 

71.குன்றுறை கோட்டி யானை குறுகியே பழனந் தன்னைத்

தின் றுசெங் கரும்பைக் கையிற் செழுங்கிளைக் காகக்கொண்டு

சென்றிடும் வழியில் வேங்கை செருக்கவக் கரும்பாற்றாக்கி

வென் றதை யெயினர் கொள்ள வீசிவே தண்டஞ்சாரும்.

72.புல்லிய சுடுவெம் பாலைப் புறாவயல் மருதம் புக்கு

நெல்லயின் றேகும் போது நீர்க்கொடி பலவைக் கவ்விச்

செல்லவே யிளம்பார்ப் பென்று செருச்செய்தச் சுளைப்பலாவை

முல்லையாய்ச் சிறுவர்க் காக்கி முனைப்பொடு பறந்துசெல்லும்.

  1. அஞ்சிறைப் பொன்காற் பூவை யலர்குருந் திருந்துகேட் பப்

பஞ்சிறைப் பவளச் செவ்வாய்ப் பைங்கிளி குறிஞ்சிபாடும் ;

நெஞ்சுநெக் குருகித் தும்பி நெய்தலை நீத்துச் செல்ல

வங்சியர் முகம்போ லுந்தா மரையளி மருதம் பாடும்.

  1. வரைதரு பொருளுங் கானம் வழங்குறு பொருளும் செந்தா மரைதரு: மருத வேணி மலிதரு பொருளு முந்நீர்த் திரைதரு பொருளு முள்ளூர் செறிதரு பொருளு மெங்கும் விரைதரு பொருள் வாகி மெய்மயக் குறுத்த தம்மா.
  2. யாணர்கொண் டெதிர்ப்பா டான வதரிடைச் சிறும்பேர் கல்யாழ்ப் பாணரும். பொருகர் தாமுங் கூத்தரும் பருங்கட் செவ்வாய்ப் பூணணி விறலி யோடு புலவரும் பெற்ற செல்வம் மாணுறப் பெறவே யாற்றுப் படுக்குவர் வள்ளி யோர்பால்.

குறிப்புகள்

70. அளை – வெண்ணெய். 71. எயினர் – பாலைநில மக்கள். வேதண்டம்-மலை. 72. கொடி-காக்கை . பலாச்சுளையைத் தன் குஞ்சென்று மயங்கியது புறா. 73. பஞ்சு-செம்பஞ்சு, இறை-தங்குதல். 74. ஏணி – நாடு, விரைதல் – ஒன்று கொன்று முற்படுதல்.

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்