Skip to main content

‘பல்லக்குத் தூக்கி’ – 1100 பக்கங்கள் கொண்ட வரலாற்றுப் புதினம்

 அகரமுதல




‘பல்லக்குத் தூக்கி’ – 1100 பக்கங்கள் கொண்ட

வரலாற்றுப் புதினம்

 

கவிஞர் வேணு குணசேகரன் படைப்பில்

3 பாகங்கள் கொண்ட 1100 பக்கங்களில்

 களப்பிரர், முத்தரையர் கால ஆட்சிப்

பின்னணியில் மன்பதை நீதிக்கான வரலாற்றுப் புதினம்

பல்லக்குத் தூக்கி

பல்லக்குத்தூக்கி  நூல் வெளியீட்டின் முன்பதிவுத் திட்டம்

நல்ல தாள், நேர்த்தியான அச்சு, உறுதியான கட்டமைப்பு,

அத்தியாயங்களில் அழகிய ஓவியங்கள், 1/8 அளவில்

ஏறத்தாழ 1100 பக்கங்கள் கொண்ட இந் நூலின் விலை உரூபாய்

1200/- ஆகும்.

முன்பதிவின் விலை: 5 படிகளுக்கு உரூபாய் 4500/-

தனிப்படிக்கு: உரூபாய் 1000/-

முன்பதிவுக்குரிய நூல்கள் பதிப்பகச் செலவில் நூல்

வெளியானதும் அனுப்பி வைக்கப்படும்.

முன்பதிவுச் சலுகையை வாசகர்கள் பயன்படுத்திக் கொண்டு

உரிய தொகையை அனுப்பிட வங்கிக் கணக்கு விவரம்:

M/s ARUNALAYA PATHIPAGAM SB A/c : 841463508 Indian Bank, Otteri Branch, Chennai-600 012.IFSC No: IDIB000O004

வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய பின் ஒப்புகைச் சீட்டுடன்

தங்கள் முழு முகவரி, பேசி, பிற விவரங்களைப் பதிப்பகத்திற்குக்

கடிதம் மூலம் உடனே தெரியப்படுத்தவும்.

கிடைக்குமிடம்:

அருணாலயா பதிப்பகம்

36 ஏ, நெல்வயல் சாலை முதல் குறுக்குத் தெரு,

பெரம்பூர், சென்னை- 600 011. பேசி : 98847 39593

காகிதம் எழுதுபவரைப் பொருத்துக் காவியம் ஆகிறது.

வாழ்க்கை வாழ்பவரைப் பொருத்து வரலாறு ஆகிறது.

– கவிஞர் வேணு குணசேகரன்.

நூலாசிரியர் பற்றிய சிறு குறிப்பு

திரு. வேணு குணசேகரன் நாடறிந்த நல்ல கவிஞர்; எழுத்தாளர்;

மாணவப் பருவத்திலேயே அனைத்துக் கல்லூரிக் கவிதைப் போட்டியில் முதல் பரிசும், பிற பரிசுகளையும் வென்றவர். எம்.காம். பட்டமும், சிஏஐஐபி பட்டயமும் படித்தவர்.

பல முன்னணிக் கவிஞர்களுடன் கவியரங்கங்களில் பாடியும், கவியரங்கத் தலைமையும் ஏற்றவர். பல இதழ்களில் சிறு கதைகள், தொடர்கதை, கட்டுரைகள் எழுதியவர். இவர் எழுதிய நூல்கள்: ஒரே உயிர், (சமூகநீதி உருவக எழுத்தோவியம்), முத்தம் உனக்கல்ல (புதினம்), போர்வாளும் பீரங்கியும்(கட்டபொம்மன் காவியம்), பொன்வேலி(புதினம்), பனிப்பாறைகள் (சிறுகதைகள்),

திருத்தமிழ்ப்பாவை (பாசுரங்கள்), குணக்குறள் (குறள்வெண்பாக்கள்), காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் (கலைஞர் கருணாநிதியின் புகழ் பாடும் தொகுப்பு நூல்), பாவேந்தரின் தன்மான வாழ்வினிலே (பாரதிதாசன் காவியம்).

திரைப்படத் துறையில் ஊர்வசி சோபா நடித்த ‘அன்புள்ள அத்தான்’. பாம்பின் பழி (Snake’s Revenge-தாய்லாந்து மொழி மாற்றுப்படம்)

– திரைப்படங்களுக்குக் கதை, உரையாடல் எழுதிப் புகழ் பெற்றவர். பல ஒலிநாடாக்களுக்குப் பாடல்களும் இயற்றியவர்.

எழில்கலை மன்றம் என்னும் இலக்கிய அமைப்பைத் தன் மாணவப் பருவத்திலேயே 1971இல் நிறுவி 50 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ச்சிகள் நடத்திக் கவிஞர்களையும், சொற்பொழிவாளர்களையும் உருவாக்கி இலக்கிய உலகுக்குக் கொடையளித்தவர். பலருக்கு யாப்பிலக்கணம் கற்றுத் தந்து அவர்களை மரபுக் கவிஞர்கள் என உருவாக்கியவர்.

இந்தியன் வங்கியில் 40 ஆண்டு காலமாகப் பணிபுரிந்தபடியே மேற்கண்ட அருவினைகளைப் புரிந்தவர் கவிஞர் வேணு குணசேகரன். இதற்காகவே 2017இல் உலகத்தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா, இவருக்கு ‘மதிப்புறு முனைவர்’சிறப்புப் பட்டம் வழங்கி மகிழ்ந்தது.

பல்லக்குத்தூக்கி – வரலாற்றுப் புதின நூல் பற்றி

‘மக்கள் நெஞ்சம்‘ கலசம்

பெரியார் காண விரும்பிய சமுதாயம் உருவாகிட மக்களை ஆற்றுப்படுத்தும் நூல் ‘பல்லக்குத்தூக்கி’. விறுவிறுப்பான எழுத்தோவியம். படிக்கத் தொடங்கினால் நூலைக் கீழே வைக்க முடியாது. கருத்துகளும், உரையாடல்களும், காட்சி அமைப்புகளும் வாசகர்களைக் கவர்ந்திழுக்கின்ற வகையான படைப்பு. இந்நூல் இலக்கிய உலகில் பேசப்படும்; வெற்றி பெறும்.

பல்லக்குத்தூக்கி – வரலாற்றுப் புதின நூல் பற்றி –

 ‘கல்வெட்டு பேசுகிறது சொர்ணபாரதி

தமிழ் இலக்கிய, அரசியல் வரலாற்றில் களப்பிரர் காலம் என்பது இருண்ட காலம் எனப்படுகிறது. ஆம். அது இருண்ட காலம்தான். யாருக்கு அது இருண்ட காலம் என்பதை அறிய வேண்டுமா? வாசியுங்கள் ‘பல்லக்குத்தூக்கி’ வரலாற்றுப் புதின நூலை.

2700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்கள் முதல் இன்று வரை பல்வேறு இலக்கிய வகைகள் நமக்குக் கிடைத்தாலும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரையான வரலாற்றின் பக்கம் அறநூல்களின் காலமாகக் கருதப்படுகிறது. ஓர் இருண்ட காலத்தில் எப்படி அறநூல்கள் தோன்றியிருக்க முடியும்? யார் இந்த வரலாற்றை மறைத்தது? ஏன் மறைத்தார்கள் என்பதை இப் புதினம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஓர் ஆலயக் கட்டமைப்பு, ஒரு கட்டடக் கட்டமைப்பு ஆகியவற்றை இதுவரை பல புதினங்களில்  நாம் பார்த்திருக்கலாம். ஆனால், ஓர் அரண்மனை நகரைக் கட்டமைப்பதை ஒரு பொறியாளருக்குரிய ஆற்றலோடு, அந்த வடிவமைப்போடு இந்தப் புதினத்தில் கட்டமைத்திருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சிக் காலமாக அது எவ்வாறு அமைந்திருந்தது என்பதை இன்றைக்கும் இன்றைய அரசியல் சூழலுக்கும் ஒத்துப் போகின்ற வழியில், அன்றைய களப்பிரர்களின் போராட்டங்களை இன்றைக்கும் நாம் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை இப் புதினம் நமக்கு உணர்த்துகிறது.

பல்வேறு வேதங்கள், சுலோகங்கள், கல்வெட்டுகள், ஆய்வுநூல்கள் ஆகியவற்றை அடிநாதமாகக் கொண்டு வெற்றுப் புனைவின்றி வீரவரலாற்றை எடுத்துச் சொல்லும் காவியமாக இந்தப் ‘பல்லக்குத்தூக்கி’ புதினம் அமைந்திருக்கிறது. அதன் எழுத்து வடிவத்திலேயே நான் வாசித்தேன். உள்ளார்ந்து வசீகரிக்கப்பட்டு மெய்ம்மறந்து நின்றேன். அந்த அனுபவத்தை நீங்களும் அடைய வேண்டும். விரைவில் ‘பல்லக்குத்தூக்கி’யை நம் விழிகளின் வழியே சுமந்து வாசகர்களின் மனங்களின் அரியணையில் இறக்கி வைப்போம்.



கவிஞர் வேணு குணசேகரன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்