ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1261-1270)-இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1251-1260) தொடர்ச்சி)
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!
திருவள்ளுவர்
திருக்குறள்
காமத்துப்பால்
127. அவர்வயின் விதும்பல் (தலைவன் வரவு நோக்கல்)
181. கணவன் வழி பார்த்த கண்கள் ஒளியிழந்தன; நாள் குறித்த விரல்கள் தேய்ந்தன.(1261)
182. அவரை மறப்பின் தோள் அழகு கெட்டுக் கை மெலிந்து வளையல்கள் கழலும்.(1262)
183. ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றவர் வரவை எண்ணி உயிர்வாழ்கிறேன். (1263)
184. கூடிப்பிரிந்த கணவன் வரவை எண்ணி நெஞ்சம் கிளைதோறும் ஏறிப்பார்க்கின்றது. (1264)
185. கணவனைக் கண்ணாரக் கண்டபின் பசலை நீங்கும். (1265)
186. கணவன் ஒருநாள் திரும்புகையில் துன்பநோய் கெட நுகர்வேன். (1266)
187. கணவன் வந்ததும் ஊடுவேனா? தழுவுவேனா? கலப்பேனா? (1267)
188. அரச வினையில் வெற்றி கண்டு இல்லம் திரும்பி விருந்தில் கலப்போம். (1268)
189. தொலைவில் சென்றார் வரவிற்கு ஏங்குகையில் ஒரு நாள் எழுநாள்போலாகும். (1269)
190. பிரிவால் உள்ளம் உடைந்தபின் அவர் வந்தால் என்ன? தழுவினால்தான் என்ன?(1270)
Comments
Post a Comment