புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.56-60
(இராவண காவியம்: 1.2.51-55 தொடர்ச்சி)
இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்
2. தமிழகப் படலம்
மருதம். வேறு
56.கல்லிடைப் பிறந்த யாறுங் கரைபொரு குளனுந் தோயும்,
முல்லையம் புறவிற் றோன்று முருகுகான் யாறு பாயும்,
நெல்லினைக் கரும்பு காக்கும், நீரினைக் கால்வாய் தேக்கும்,
மல்லலஞ் செருவிற் காஞ்சி வஞ்சியு மருதம் பூக்கும்.
57.சேற்றினை யுழுவார் சேற்றிற் செந்நெலை விதைப்பார் செந்நெல்
நாற்றினை நடுவார் நாற்றின் நடுக்களை களைவார் நன்னெல்
தூற்றினை யறுப்பார் தூற்றின் சுமையினைச் சுமப்பார் சுற்றும்
ஏற்றினை யுகைப்பா ரேற்றி னிகல்வலி யுழுநர் வாழ்வே.
ஓலையிலாப்பொருளை நீக்கி நிலைப்பொரு ளாக்குமாபோல்
அலையடு பதரும் புல்லு மப்புறப் படுத்தி யான்ற
கலைவலா ருள்ளம் போன்ற களத்திடைக் களமர் மேலை
மலையெனக் குவித்துச் செந்நெல் மணிப்பொலி தூற்று வாரே.
தூற்றிய பொலியைத் தங்கள் தொழிலினுக் குதவிநாளும்
ஆற்றிய வினைஞர்க் கெல்லா மள வறிந் தளித்துப் பெற்ற
பேற்றினை யில்லஞ் சேர்த்துப் பெருநிலக் கிழவி தன்னைப்
போற்றியே பொலிக வென்று பொங்கல்வைத் துவக்குவாரே.
60, போர்க்களம் பாடிப் பெற்ற பொன் மலர் பொலியச் சூடி
மாக்கிணைப் பொருநர் செந்தா மரைக்குள மருதம் பாடி
ஏர்க்களம் பாடிப் பெற்ற பரிசினை யிணை யி லாத்தம்
ஊர்க்களம் பாடு வார்தம் முடைப்பரி சாக்கு வாரே
குறிப்புகள்
56, கல்-மலை.
முருகு-தேன், மணம்; மல்லல்-வளம், செறு -வயல்,
- சுற்று தல்-தாம்பாடுதல், போரடித்தல்,
ஏறு – எருது. இகல் -மா றுபாடு.
60, கிணை -மரு தப்பறை. ஊர்க்களம்-ஊரிடம்,
Comments
Post a Comment