Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – 075. அரண் : வெ. அரங்கராசன்

attai-kuralarusolurai

02. பொருள் பால்
08. அரண் இயல்

அதிகாரம்   075. அரண் 

நாட்டிற்குத் தேவையான இயற்கை,
செயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்கள்.
  1. ஆற்று பவர்க்கும், அரண்பொருள்; அஞ்சித், தம்
   போற்று பவர்க்கும் அரண்.

 போரைச் செய்வார்க்கும், அஞ்சுவார்க்கும்
கோட்டையே தக்கதோர் பாதுகாப்பு.

  1. மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல்
   காடும், உடைய(து) அரண்.

ஆழ்அகழி, வெட்டவெளி, மலைகள்
காடுகள் கொண்டது அரண்.
  1. உயர்(வு),அகலம், திண்மை, அருமை,இந் நான்கின்
   அமை(வு)அரண் என்(று),உரைக்கும் நூல்.

உயர்வு, அகலம், உறுதி,
நெருங்க முடியாமை அரண்இயல்.

  1. சிறுகாப்பில் பேர்இடத்த(து) ஆகி, உறுபகை
   ஊக்கம் அழிப்ப(து) அரண்.
                      
சிறுவாயில், பெரிய உள்இடம்
கொண்டு பகைஅழிப்பது கோட்டை.

  1. கொளற்(கு)அரிதாய்க் கொண்டகூழ்த்(து) ஆகி அகத்தார்
   நிலைக்(கு)எளி(து)ஆம் நீர்அ(து) அரண்.
                   
வெல்லக் கடியது; உணவுக்கு,
உள்வீரர்க்கு எளியது, அரண்.

  1. எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்(து)உதவும்
   நல்லார் உடைய(து) அரண்.

எல்லாப் பொருள்கள், உள்வீரர்க்கு
உதவுநல்லார் உடையது கோட்டை.

  1. முற்றியும், முற்றா(து) எறிந்தும், அறைப்படுத்தும்
   பற்றற்(கு) அரிய(து), அரண்.
                   
வளைத்தும், திடீர்ப்போராலும் வஞ்சித்தும்
வெல்ல முடியாதது அரண்.

  1. முற்(று)ஆற்றி, முற்றி யவரையும், பற்(று)ஆற்றிப்,
   பற்றியார் வெல்வ(து), அரண்.

வளைப்பை, வளைத்த பகைவரை
வெல்ல விடாதது, வல்அரண்.
  1. முனைமுகத்து மாற்றலர் சாய, வினைமுகத்து
   வீ(று)எய்தி, மாண்ட(து) அரண்

போர்க்களத்தில் பகைவீழப், போர்த்திறன்
வெற்றிபெற, நிற்பது கோட்டை.

  1. எனைமாட்சித்(து) ஆகியக் கண்ணும், வினைமாட்சி
   இல்லார்கண், இல்ல(து) அரண்.


செயல்திறன் இல்லார்க்குச் சிறப்புகள்
நிறைந்த அரணாலும் பயன்இல்.
பேராசிரியர் வெ. அரங்கராசன்
(
(அதிகாரம் 076. பொருள் செயல் வகை)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue