திருக்குறள் அறுசொல் உரை – 075. அரண் : வெ. அரங்கராசன்
பேரா. வே. அரங்கராசன் 25 அக்தோபர் 2015 கருத்திற்காக.. (அதிகாரம் 074. நாடு தொடர்ச்சி) 02. பொருள் பால் 08. அரண் இயல் அதிகாரம் 075. அரண் நாட்டிற்குத் தேவையான இயற்கை , செயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்கள் . ஆற்று பவர்க்கும், அரண்பொருள்; அஞ்சித், தம் போற்று பவர்க்கும் அரண். போரைச் செய்வார்க்கும், அஞ்சுவார்க்கும் கோட்டையே தக்கதோர் பாதுகாப்பு. மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல் காடும், உடைய(து) அரண். ஆழ்அகழி, வெட்டவெளி, மலைகள் காடுகள் கொண்டது அரண். உயர்(வு),அகலம், திண்மை, அருமை,இந் நான்கின் அமை(வு)அரண் என்(று),உரைக்கும் நூல். உயர்வு, அகலம், உறுதி, நெருங்க முடியாமை அரண்இயல். சிறுகாப்பில் பேர்இடத்த(து) ஆகி, உறுபகை ஊக்கம் அழிப்ப(து) அரண். சிறுவாயி...