வேண்டும்! வேண்டும்! – ஓ.மு.குருசாமி

வேண்டும்! வேண்டும்! – ஓ.மு.குருசாமி


kuralneri02தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காக்க வேண்டும்!
தளராமல் எந்நாளும் உழைக்க வேண்டும்!
வாய்மொழியைச் செயலுருவா ஆக்க வேண்டும்!
வள்ளுவர்தொல் காப்பியமும் பரவ வேண்டும்!
ஆய்வுரைகள் தமிழ்மொழியில் பெருக வேண்டும்!
தண்டமிழே தலை சிறந்து விளங்க வேண்டும்!
ஓய்ந்துவிடும் மனமுடையார் குறைய வேண்டும்!
உலகமெலாம் தமிழ்நூல்கள் செல்ல வேண்டும்!
திருவுடைய ‘குறள் நெறியே’ பரவ வேண்டும்!
தினந்தினமும் திருக்குறளை ஓத வேண்டும்!
அருளுடையார் அன்புடையார் பெருக வேண்டும்!
அறிவுடையார் மொழிகாக்கக் கிளம்ப வேண்டும்!.
உருவடைய நற்செயலை ஊக்க வேண்டும்!
உண்மைக்கு வணக்கமதைச் செய்ய வேண்டும்!
இருளுடைய தமிழெதிரி நீங்க வேண்டும்!
இன்றமிழின் இலக்கியத்தைக் கற்க வேண்டும்!

-    குறள்நெறி : மாசி 18,1995 / 1.3.1964

thamizh01
- அகரமுதல இணைய இதழ் 18

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்