திருக்குறளில் உருவகம் 3 – வீ.ஒப்பிலி
திருக்குறளில் உருவகம் 3 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி இலக்குவனார் திருவள்ளுவன் 30 மார்ச்சு 2014 கருத்திற்காக.. (23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) இவ்வாறு முட்களும், அடிமரத்தை வெட்டி வீழ்த்தும் கோடரியும் துன்பத்தில் உருவாகின்றன. மரத்தை வெட்டுதலும், வீழ்த்துதலும் அழிவின் சின்னமாகின்றன. இவ்வாறே பிணக்கினால் வாடிய காதலி வாடிய கொடியாகிறாள்; அவளது ஊடலை நீக்காது, கூடாது செல்லும் காதலன் அக்கொடியை அறுக்கும் கொடியவனாகிறான். முள் மரம் இளையதாக இருக்கையிலே அழிக்கப்பட வேண்டும்; ஆனால் பழம் பெரும் அடிமரமும், வாடிய கொடியும் காக்கப்பட வேண்டும். பெருங்குடி காப்பவன் முதலில் இல்லாளின் வாட்டத்தை நீக்கிக் காப்பவனாக இருக்க வேண்டுமல்லவா? கயவரை எண்ணிய திருவள்ளுவர் கரும்பை எண்ணியது வியப்பே! கரும்பின் இனிமையை எளிதில் நுகர முடிவதில்லை; அதை நெருக்கிப் பிழிந்தால்தான், பயன் விளைவிக்கும், இவ்வினிய பொருளின் தன்மை கயவர்க்கு உருவகமாக அமைகிறது. கடிந்து நடத்தினால்தான் அவர்கள் பயன்படுவர். மூங்கில் பெண்ணில் த...