"வாராது வந்த மாமணி' வ.உ.சி!: கலைமாமணி விக்கிரமன் First Published : 27 Jun 2010 01:55:00 AM IST Last Updated : கப்பலோட்டிய தமிழர் என்ற அளவுக்கு மட்டுமே, வ.உ.சிதம்பரனாரைப் பற்றிப் பெரும்பாலோருக்குத் தெரியும். நாட்டு விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட திலகரைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி, அவர் வழி நடந்த பெரும் தியாகி வ.உ.சிதம்பரனார்.திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி உலகநாதர்-பரமாயி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். வ.உ.சி.யுடன் பிறந்தவர்கள் அறுவர். வ.உ.சி.யும், சகோதரர் மீனாட்சிசுந்தரமும் எஞ்சியவர்கள். ஒட்டப்பிடாரத்தில் தொடக்கப் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய சிதம்பரனார், திருச்சியில் சட்டம் பயின்று 1894-இல் வழக்குரைஞரானார். 1895-...
Posts
Showing posts from July, 2010
- Get link
- X
- Other Apps
இந்த வாரம் கலாரசிகன் First Published : 04 Jul 2010 12:00:00 AM IST Last Updated : பழ.பழனியப்பன், கவிஞர் க.அம்சப்பிரியா கோவை செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் உமா பதிப்பகத்தாரின் அரங்கில் நுழைந்ததும் கண்ணில் தட்டுப்பட்டது ஒரு புத்தகம். கம்பன் என்று சொன்னாலே எனக்குக் கரும்பு தின்பதுபோல. அதிலும் "கம்பன் அடிசூடி' பழ.பழனியப்பன் எழுதிய "கம்ப நிதி' என்கிற புத்தகம் எனும் போது என்னை அறியாமலேயே காந்தத்தை நோக்கி இழுக்கப்படும் இரும்பாக அந்தப் புத்தகம் ஈர்த்தது. சென்னை கம்பன் கழகத்தின் செயலாளராக ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் இருந்தவர். இப்போது காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளராக இருந்து "கம்பன் அடிப்பொடி' விட்டுச்சென்ற பணிகளை தொய்வில்லாமல் தொடர்பவர்...
- Get link
- X
- Other Apps
மாதம் ஒரு (இலக்கிய) விவாதம் ப.இரமேஷ் First Published : 04 Jul 2010 12:00:00 AM IST Last Updated : ஐம்பெரும் காப்பியங்களுள் கம்பராமாயணம் ஏன் இடம்பெறவில்லை? சமயப் பூசலே காரணம் காப்பியம்' என்பது "காவியம்' என்பதன் வட சொல்லின் திரிபு ஆகும். ஐம்பெருங்காப்பியம் என்னும் வழக்கு பிற்காலத்தில் தோன்றியது என்பதை இதன் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்னும் இலக்கிய வரிசை போல பிற்காலத்தில் ஐம்பெருங்காப்பியங்கள் என்னும் வரிசையும் வழங்கிவரத் தொடங்கியது.வடமொழியில் நைடதம், ரகுவம்சம், குமாரசம்பவம்,, கிராதர்ஜுனியம், சிசுபாலவதம் ஆகிய ஐந்தும் ஐம்பெருங் காப்பியங்களாக விளங்கின. அந்த வடமொழி மரபைப் பின்பற்றியே தமிழில் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியங்கள் என்றும், ஐஞ்சிறு காப்பியங்க...
- Get link
- X
- Other Apps
சங்க இலக்கியத்தில் பங்காளிச் சண்டை ஆ.திருஆரூரன் First Published : 04 Jul 2010 12:00:00 AM IST Last Updated : பண்டைத் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்ற காலங்களில் பெருநில வேந்தர்களும் குறுநில மன்னர்களும் மண்ணாசை காரணமாகவோ, பெண்ணாசை காரணமாகவோ தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் புரிந்து வந்துள்ளனர். அதுபோல வேதாயாதிகள் (உடன் பிறந்தோர்) ஒருவரை ஒருவர் நாடாளும் உரிமைக்காகப் போராடிய வரலாறுகளும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. அதற்கு எடுத்துக் காட்டாக புறநானூற்றுப் பாடல்களுள் ஒன்றை இங்கு காண்போம்.அண்ணன் தம்பிகளான சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் சோழ நாட்டின் இருவேறு பகுதிகளில் ஆட்சி செய்து வந்தபோதிலும் அவ்வப்போது தங்களுக்குள் தொடர்ந்து போர்புரிந்து வந்துள்ளனர். ஆவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த நெடுங்கிள்ளி, அண்ணன் நலங்கிள்ளியுடன் நடந்த போரில் தோற்று ...
- Get link
- X
- Other Apps
காந்தியக் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை கலைமாமணி விக்கிரமன் First Published : 04 Jul 2010 12:00:00 AM IST Last Updated : திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது. காந்திஜி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது'' என்று மூதறிஞர் ராஜாஜி பாராட்டியுள்ளார். பாரதி, வ.உ.சி., நாமக்கல் கவிஞர் முதலான தமிழ்மொழிக் காவலர்கள் ராஜாஜி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். "நாமக்கல் கவிஞர்' என்று மக்களால் பாராட்டப்பட்ட வெ.இராமலிங்கம் பிள்ளை, மிகமிக எளிய சொற்களால் கவிதை பாடி, காந்தியக் கொள்கையைத் தமிழ்நாட்டில் பரப்பிய ஒரே கவிஞர் என்று சொல்லலாம். காந்திமகான் மறைந்தவுடன் ஒவ்வொரு வாரமும் தினமணியில் காந்திக்கு அஞ்சலி செலுத்தி 52 வாரங்கள் இசைப்பாடல்கள் எழுதினார். அவர் எழுதிய கவிதைத் தொகுதியில் "காந்தி...
- Get link
- X
- Other Apps
நன்னெறி First Published : 11 Jul 2010 01:28:00 AM IST Last Updated : துறைமங்கலம் சிவப்பிரகாசர் அருளியது கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித்தம்மால் இயலுதவி தாம்செய்வர் - அம்மாமுளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்குவிளைக்கும் வலியனதாம் மென்று. (பாடல்-27)முளைக்கும் பற்கள் தம்முடன் இருக்கும் நாவிற்கு கடினமான தின்பண்டங்களாயினும், மென்று கொடுத்து மிக்க சுவையைத் தரும். அதுபோல, கற்றறிந்த சான்றோர் பிரதிபலனை எதிர்பாராமல் உடலை வருந்தச் செய்து, தம்மால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வார்கள். நன்னெறி First Published : 04 Jul 2010 12:00:00 AM IST Las...