பூங்கொடி 10 – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி
(பூங்கொடி 9 – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை- தொடர்ச்சி)
பூங்கொடி
பழியுரை காதை
ஊரார் பழிமொழி
இசைத்தொழில் புரியும் இவள் இத் தொழிலை
வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல் ?
35செருக்கினள் கொல்லோ செல்வம் மிகவாய்ப்
பெருக்கினள் கொல்லோ ? என்றுரை பேசி
ஏளனம் செய்தனர் என்ற கேன்மொழிக்கு
அருண்மொழி அலருக்குக் கூசாமை
அருண்மொழி நகைத்தனள் அருளினள் சிலசொல்;
பொதுப்பணி புரிவோர் புகழ்வும் இகழ்வும்
40 நினைத்திடல் வேண்டும் ஒருநிகர் எனவே;
ஆருயிர்த் தோழி! அந்நாள் வடிவேற்
பேருடைச் செம்மலைப் பேணிஎன் காதற்
கொழுநர் என்று கொண்டபின் ஊரார்
இழிசொல் எத்துணே ஏசினர் அறியாய்?
45 கலப்பு மணத்தைக் கடிந்துரை யாடினர்
கலைத்தொழில் புரிந்தேன் கற்பினைப் பழித்தனர்
மலைத்திலேன் சிறிதும், மனமுங் கூசிலேன்;
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment