Skip to main content

பூங்கொடி 9 – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை

 


(பூங்கொடி 8  – கவிஞர் முடியரசன்: பழியுரை காதை: வஞ்சியின் கவலை- தொடர்ச்சி)

பூங்கொடி

பழியுரை காதை

அருண்மொழியின் இசைப்புலமை

 செவ்விய இசைநூல் இவ்வுல குள்ளன

அவ்வள வும்பயில் அறிவினள்; பிறமொழி

20 இசைபல முயன்று வசையற வுணர்ந்து

நசையுடன் ஆய்ந்து நம்தமிழ் இசைக்கே

ஆக்கம் தந்தவள்; அரியதோர் இசைப்புனல்

தேக்கிய கலைக்கடல்; தெள்ளிய இசையால்

உலகை வென்றவள்; உயர்ந்தவள் குரலால்

25 குழலும் யாழும் கொட்டம் அடங்கின;

பாடும் முறையாற் பாவை பாடுவள்;

ஆடாள், கோணாள், அங்கக் குறும்புகள்

நாடாள், அந்த நல்லிசைச் செல்வி

வாயிதழ் விரியின் வானிசை கேட்கும்

30  சேயிதழ் மலர்க்கை தாளச் சீர் இடும்

அன்னவள் காணா அரங்கம் இல்லை

பொன்மிகக் குவித்தாள் புகழோ மிகுத்தாள்;

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்