பூங்கொடி 1 – கவிஞர் முடியரசன்
பூங்கொடி முகப்புப் பாடல்
பூங்கொடி
கண்ணனைய மொழிகாக்கக்
கடிமணத்தைத் துறந்த ஒரு
பெண்ணணங்கின் வரலாறு
பேசுமொரு காப்பியமாம்.
பூங்கொடி
மொழிகலங் கேடுறக் கண்டுளந் தளர்ந்தாள்
விழிநலங் குறைவது போலவள் உணர்ந்தாள்.
உணர்ச்சி எழுச்சியாயிற்று – எழுச்சி வளர்ச்சியாயிற்று:
அவள் வாழ்வே ஓர் அறப்போராயிற்று.
முடிவு?
செந்தமிழாம் மொழிகாக்கத் தனைக்கொடுத்தாள்
செயிர்தீர்ந்த மொழிப்போரில் உயிர்கொடுத்தாள்.
அதனால் எங்கள்
உடலுங் குருதியும் அவளானாள்
உளத்தில் கொதிக்கும் அழலானாள்
மூச்சும் பேச்சும் அவளானாள்
மும்மைத் தமிழின் அணங்கானாள்.
அவள் வரலாறு கூறும் இப்பெருங்காப்பியம்
இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பேழை ;
நாட்டின் நிலைக்கண்ணாடி :
மொழிக்கொரு காப்பியம்.
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment