பூங்கொடி 4 – கவிஞர் முடியரசன்: கதைச் சுருக்கம்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 28 June 2023 அகரமுதல (பூங்கொடி 3 – கவிஞர் முடியரசன்: பதிப்புரையும் முன்னுரையும் – தொடர்ச்சி) பூங்கொடி – கதைச் சுருக்கம் தமிழகம், எங்கும் விழாக் கோலத்துடன் பொலிந்தது; பொங்கற் புதுநாள் அனைவ்ர் உள்ளத்தையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது. பகலும் இரவும் கலை நிகழ்ச்சிகள் சிறப் புற்றாேங்கின. ஆனல், அருண்மொழியும் அவள் மகள் பூங்கொடியும் இசையரங்கேற வாராமையால் ஊரார் பலவாறு பேசினர். இதனால் வருந்திய வஞ்சி, தன்மகள் அருண்மொழிக்குத் தேன்மொழி வாயிலாகச் செய்தி கூறியனுப்பினள். மலையுறையடிகளுடைய குறளகத்திற் சேர்ந்த அவள் இத் துறையையே வெறுத்து வாராது நின்றனள். அருண்மொழி தன் தோழியாகிய தேன்மொழியிடம் தன் கணவன் வடிவேல் படுகொலையுண்டதைக் கூற்க் கேட்டுக்கொண்டிருந்த பூங்கொடி தேம்பியழுதனள். அருண்மொழி, அவ்வழுகையை மாற்றப் பூங்கொடியைப் பூங்காவிற்கு அனுப்பினள். தோழியாகிய அல்லியும் உடன் சென்றாள். பூங்காக் காட்சிகளை இருவரும் கண்டுகளிக்கும் பொழுது பூங்கொடிமேற் காதல் கொண்ட கோமகன் அங்கு வருவதறிந்து,...