ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1181-1190) – இலக்குவனார் திருவள்ளுவன்
(முன் பகுதியின் தொடர்ச்சி)
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!
(திருவள்ளுவர், திருக்குறள்,)
காமத்துப்பால்
119. பசப்புறு பரவல் – பிரிவால் வந்த பசலையைக் கூறல்
- 101. காதலரின் பிரிவிற்கு இசைந்தேன் பசலைக்கு யார் காரணமென்பேன்? (1181)
- 102. காதலர் தந்தார் என உடலெங்கும் பரவுகிறது பசலை. (1182)
- 103. அழகையும் நாணத்தையும் கொண்டார்; காமநோயும் பசலையும் தந்தார். (1183)
- 104. பேச்சிலும் நினைப்பிலும் அவரே! வந்தது ஏனோ பசலை? (1184)
- 105. காதலர் பிரியும் போதே பசலையும் பரவுகிறதே (1185)
- 106. விளக்கில்லையேல் வருகிறது இருள். அவர் இல்லையேல் படர்கிறது பசலை. (1186)
- 107. தழுவியபின்தான் பிரிந்தேன்; விரைந்து வந்ததே பசலை. (1187)
- 108. பசலை கொண்டார் என்பார் பசலை தந்தார் எனச் சொல்லாதது ஏன்? (1188)
- 109. காதலர் நன்னிலையில் இருப்பார் எனில் இருக்கட்டும் பசலை. (1189)
- 110. காதலரைத் தூற்றார் எனில் பசலையும் மகிழ்ச்சியே. (1190)
Comments
Post a Comment