Posts

Showing posts from February, 2022

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1201-1210) – இலக்குவனார் திருவள்ளுவன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 February 2022         No Comment (ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1191-1200) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,)  காமத்துப்பால் 1 21. நினைந்தவர் புலம்பல் 121. கள்ளைவிட இனிது காதல். (1201) 122. பிரிந்தாலும் நினைத்தால் இனியது காதலே! (1202) 123. வருவதுபோன்ற தும்மல் வரவில்லையே! அவரும் நினைப்பவர்போல் நினைக்கவில்லையோ? (1203) 124. என் நெஞ்சில் காதலர்! அவர் நெஞ்சில் நானோ?(1204) 125. அவர் நெஞ்சுள் வரவிடாதார், எம் நெஞ்சுள் வர நாணவில்லையா?(1205) 126. அவருடனான நாளை நினைப்பதாலே வாழ்கிறேன். (1206) 127. மறக்காதபோதே பிரிவு சுடுகிறதே! மறந்தால் … ? (1207) 128.  எத்தனை முறைகள் நினைத்தாலும், சினவாமை அவர் சிறப்பன்றோ ! (1208) 129. “இருவரும் ஒருவரே” என்றவர் பிரிந்தமையால் உயிர் போகிறதே ! (1209) 130. பிரிந்தவரைத் தேடுவதால் நிலவே மறையாதே! (1210) இலக்குவனார் திருவள்ளுவன் (தாெடரும்)

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 57

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 February 2022         No Comment (அகல் விளக்கு – மு.வரதராசனார். 56. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 23 தொடர்ச்சி இருந்தாலும், புத்தகப் படிப்பில் அவளுக்கு, ஆர்வம் இல்லை. போகப் போக அதை நன்றாக உணர்ந்தேன்.  புத்தகப் படிப்பில் அக்கறை இல்லாவிட்டாலும், அறிவுப் பசி மட்டும் இருந்தது.  செய்தித்தாள் படித்து ஏதாவது சொன்னால், ஆர்வத்தோடு கேட்பாள். வார இதழிலிருந்து ஏதாவது கதை படித்துச் சொன்னால் கேட்பாள். நாளடைவில் அவளே அந்த இதழ்களில் இருந்த கதைகளைப் படித்துப் பழகினாள். பழக்கம் விடவில்லை. வார இதழ்கள் எப்போது வரும் என்று காத்திருந்தாள். சிறு கதைகளைவிடத் தொடர் கதைகளில் ஆர்வம் காட்டினாள். போன வாரத்தில் கதைத் தலைவன் இந்த ஊருக்குப் போனான். தலைவி இப்படி இருந்தாள். இந்த வாரத்தில் என்ன நடக்குமோ தெரியவில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதைவிட ஆர்வம் மிகுதியாக இருந்த ஒரு துறை திரைப்படம் என்று தெரிந்து கொண்டேன். திரைப்படத்துக்குப் போகவேண்டும் என்ற ஆசையை அவள் வெளியே காட்டி...

தந்தை பெரியார் சிந்தனைகள் பின்னிணைப்பு 1 & 2

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         26 February 2022         No Comment ( தந்தை   பெரியார்   சிந்தனைகள் 41 இன்   தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 42 பின்னிணைப்பு-1 சவகர்லால் நேரு மறைந்த போது அவர் நினைவாக நேரு அவர்களைப் பற்றி அறிஞர் கருத்துகளைத் திரட்டி ‘ இந்தியப் பேரொளி ’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டது கழகம். அங்ஙனமே அறிஞர் அண்ணா மறைந்தபோது அம்முறையில் தொகுத்து  ‘தமிழ்ப் பேரொளி ’ என்ற தலைப்பில் வெளியிட்டது. தந்தை பெரியார் மறைவு நினைவாக இங்ஙனமே ஒருநூல் வெளிவரத் திட்டமிட்டது கழகம். ஆனால் எக்காரணத்தாலோ நூல் வெளிவரவில்லை. அதற்குக் கழகம் வேண்டியபடி 18.2.1974இல் தந்தை பெரியாரைப்பற்றி எழுதிய குறிப்பு இது: “தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்த பெரியார்” (பேராசிரியர்  டாக்டர்  ந.சுப்பு ரெட்டியார் , தமிழ்ப் பேராசிரியர், துறைத் தலைவர், திருவேங்கடவன் பல்கலைக் கழகம், திருப்பதி) தமிழ் கூறு நல்லுலகில், பெருமையுடனும் புகழுடனும் வாழ்ந்து புகழை மட்டிலும் இம்மண்ணுலகில் நிறத்தி விட்டுப் பொன்னுலகு புக்கவர்...

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 32

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         25 February 2022         No Comment (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 31 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  12 தொடர்ச்சி “அவர் உளறவில்லை! உண்மையைத்தான் சொல்லுகிறார். அன்று உங்களைப் பார்த்ததும் பார்க்காததுபோல் வேண்டுமென்றேதான் நான் எழுந்து போனேன். சந்தர்ப்பம் அப்படி அமைந்துவிட்டது. அன்று உங்களை ஏமாற்றிய வேதனை இன்னும் என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையினால்தான் இந்தக் காய்ச்சல் வந்தது. அதுதான் என்னைப் படுக்கையில் தள்ளியது.” பேச முடியாமல் தொண்டைக் கரகரத்துக் குரல் வந்தது பூரணிக்கு. கண்களில் நீர் பனிக்க அரவிந்தனின் முகத்தைப் பார்த்தாள் அவள். அவன் அமைதியாக இருந்தான். தலையணைக்கு அடியிலிருந்து அந்தப் பாழும் கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் பொறுமையாக முழுவதும் படித்தான். “இந்தா! நீயும் படி” என்று முருகானந்தத்திடமும் கொடுத்துப் படிக்கச் சொன்னான். பூரணிக்கு அதைத் தடுக்க வேண்டுமென்று தோன்றவேயில்லை. முருகானந்தம் யாரோ வேற்று மனிதனாகத் தோன்றினால் தானே தடுப்பதற்கு? அவனைப் பு...

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.31-35

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         24 February 2022         No Comment (இராவண காவியம்: 1.2.26-30 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2.  தமிழகப்   படலம் ஐந்நிலம் – குறிஞ்சி வேறு 31.இவ்வகை நான்குட னியன்று பல்வளந் துவ்விய தமிழகத் துணிந்த மேலவர் செவ்விய முறையினிற் சென்ற வைந்நிலக் குவ்வையின் முதலிய குறிஞ்சி காணுவாம். 32.இடிகுரல் யானைதன் னிளைய வின்னுயிர்ப் பிடிபசி களைந்திடப் பெரிய யாக்கிளை முடியது படியுற முறிக்கு மோசையாற் படிசிறு கிளியினம் பறந்து செல்லுமால். 33.அருவிய முருகிய மார்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால். 34.பன்றியி னினமுறாப் பரணங் காப்பருஞ் சென்றற முதிர்தினைக் கதிர்கொய் செம்மருங் கன்றிய வள்ளியின் கிழங்கு கன்னருங் குன்றெதி ரொலிபடக் குறிஞ்சி பாடுவர். 35.கிளிகடி பரணிடைக் கிளவி வேட்டவன் குளிர்நிழல் வேங்கையிற் குரவை யாடிடும் அளிமுரல் குழலியி னளகத் துண்மறை ஒளிமுக மதியினை யுருவி நோக்குமால். குறிப்புகள் முன்-கிழக்கு. இந்திரம்-கிழக்க...

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1191-1200) – இலக்குவனார் திருவள்ளுவன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         23 February 2022         No Comment ( ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1181-1190) தொடர்ச்சி ) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! ( திருவள்ளுவர் ,  திருக்குறள் ,)  காமத்துப்பால் 120. தனிப்படர் மிகுதி – பிரிவால் ஏற்படும் தனிமைத் துன்பம் விரும்புநர் விருப்பம் விதையில்லாப் பழம். (1191) காதலர் மீதான காதல் வான் மழை. (1192) விரும்புநர் பிரிந்தாலும் மீள வருவார் என்னும் செருக்கு வரும்.(1193) விரும்புநர் விரும்பவில்லையேல் உலக உறவால் பயன் என்? (1194) காதல் கொண்டவர் காதலிக்காவிட்டால் வேறென் செய்வார்? (1195) காவடிபோல் இருபுறக் காதலே இன்பம். (1196) காமன் ஒருபக்கமே நிற்பதால் என் துன்பமும் துயரமும் அறியானோ? (1197) காதலரின் இன்சொல் பெறாக் கொடுமைபோல் வேறுஇல்லை.(1198) காதலரது புகழ், இன்பம் செவிக்கு.(1199) அன்பில்லாதவரிடம் ஆறுதல் பெறுவதினும் கடலைத் தூர்ப்பது எளிது. (1200) இலக்குவனார் திருவள்ளுவன் (தாெடரும்)