பேராசிரியர் மதியழகி வாழ்க! - மறைமலை இலக்குவனார்
பேராசிரியர் மதியழகி வாழ்க! பேரன்புத் தங்கை மதியழகி வாழ்க!
பேராசிரியர் மதியழகி வாழ்க!
பேரன்புத் தங்கை மதியழகி வாழ்க!
பல்வித்தகமும் பாங்குறப் பயிற்றும்
நல்லாசிரியராய் நற்பணி ஆற்றியும்
தமிழ்த்துறைத் தலைவராய்த் தகைமை தாங்கியும்
கல்விநிலையக் கனிவுறு முதல்வராய்
பல்கலைக்கழகப் பேரவைக் குழுவிலும்
கல்லூரி ஆசிரியர் போராட்டத்திலும்
முத்திரை பதித்த போராளியாகவும்
அயர்விலாப் பணிகள் ஆற்றிய மாண்பு
அன்புத்தங்கை மதியழகிக்கே
என்றும் உரியது; வாழ்க! வாழ்க!
எழுபான் அகவை எய்தும் இந்நாளில்
முழுநிறை அன்புடன் வாழ்த்தி மகிழ்கிறேன்!
பேராசிரியர் மதியழகி வாழ்க!
பேரன்புத்தங்கை மதியழகி வாழ்க!
புதல்விகள் இருவரும் பேரனும் பேத்தியும்
எல்லா நலனும் எய்துக இனிதே!
வாழிய வாழிய வளர்தமிழ் போலவே!
Comments
Post a Comment