தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 11/17
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 01 November 2021 No Comment (தனித்தமிழ்க் கிளர்ச்சி : 10/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 11/17 தடமொழியாம் நம்முடைய தமிழ்ப்போர்வை தாம்போர்த்தி வடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றார் அம்மானை வடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றா ரெனிலவர்கள் படையின்றிச் சூழ்ச்சியால்நம் பதவிகொள்வார் அம்மானை பதவிகொள இனிவிடின்நாம் பதராவோம் அம்மானை (51) கடல்சூழும் இவ்வுலகில் கவினியநம் தமிழர்க்கு உடல்பொருள் ஆவிகள் ஓண்தமிழே அம்மானை உடல்பொருள் ஆவிகள் ஓண்டமிழே யாமாயின் அடல்வேண்டும் தமிழை அழிப்பவரை அம்மானை அடல்தவறாம் இனிஅவரே அழிந்திடுவார் அம்மானை (52) தமிழ்நாட்டில் தமிழையே தாய்மொழியாக் கொண்டசில தமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றார் அம்மானை தமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றா ராமாயின் தமிழ்க் குருதி அவர்க்கில்லாத் தன்மையேன் அம்மானை குருதி வட நஞ்சுதீண்டக் குலைந்ததுகாண் அம்மானை (53) இடையிற்பல் லாண்டுகளாய் இன்னலுற்ற...