நாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 30 செப்தம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி! வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅ தெழுதலால் – வாழ்நா ளுலவாமுனொப்புர வாற்றுமின் யாரு நிலவார் நிலமிசை மேல். (நாலடியார் பாடல் 22) பொருள்: வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் தோன்றுவதால், ஆயுள் முடியும் முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். சொற்பொருள்: [வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅது எழுதலால் – வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும் நிலவார் நிலமிசை மேல்.] வாழ்நாட்கு = வாழும் நாள்களுக்கு; அலகு ஆ(க) = அளவிடும் கருவியாக; வயங்கு =(விளங்கும்) ஒளிவிடும்; ஒளி = ஒளிக் கதிர்களை உடைய; மண்டிலம் = சூரியன்; வீழ்நாள் = வீழுங்காலம்; படாது = உண்டாகாமல்; எழுதலால் = (நாள்தோறும்) தோன்றுவதால்; வாழ்நாள் = வாழும்நாள்; உலவாமுன் = முடியும் முன்னர்; ஒப்புரவு = யாவர்க்கும் உதவும்...