Skip to main content

தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டு முரசே! – பாவேந்தர் பாரதிதாசன்

murasu03

கொட்டு முரசே!

எல்லார்க்கும் நல்லின்பம்
எல்லார்க்கும் செல்வங்கள்
எட்டும் விளைந்ததென்று
கொட்டுமுரசே – வாழ்வில்
கட்டுத் தொலைந்ததென்று
கொட்டு முரசே!
இல்லாமை என்னும்பிணி
இல்லாமல் கல்விநலம்
எல்லார்க்கும் என்றுசொல்லி
கொட்டுமுரசே – வாழ்வில்
பொல்லாங்கு தீர்ந்ததென்று
கொட்டு முரசே!
சான்றாண்மை இவ்வுலகில்
தேன்றத் துளிர்த்த தமிழ்
மூன்றும் செழித்ததென்று
கொட்டுமுரசே – வாழ்வில்
ஊன்றிய புகழ்சொல்லிக்
கொட்டு முரசே!
ஈன்று புறந்தருதல்
தாயின்கடன்! உழைத்தல்
எல்லார்க்கும் கடனென்று
கொட்டுமுரசே! – வாழ்வில்
தேன்மழை பெய்ததென்று
கொட்டு முரசே!
bharathidasan08- பாவேந்தர் பாரதிதாசன்


அகரமுதல 75 நாள் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19, 2015

Comments


  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்