பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 19– ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 19
அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம் : மரக்கிளை
நிலைமை : (பேடும் சிட்டும் மனமொன்றி
ஈடுபடல் நல் இன்பத்தில்)
பெண் : சீழ்க்கை ஒலியும்! கைத்தட்டலும்
வானை முட்டுது! பார்த்தாயா?
ஆண் : வாழ்வில் காண இன்பத்தை
வாழ்த்தொலி மூலம் கண்டுவிடும்
ஒருவகைக் கூட்டமாய் இருக்கலாம்!
என்றே ஆண்சிட்டு விடையிறுக்க
(குறுநகை கொண்டு பேடையும்
சிட்டின் கழுத்தை நீவியது)
(காட்சி முடிவு)
(பாடும்)
Comments
Post a Comment