இனமே சாகும்! – பாரதிதாசன்

azhaippu02

தமிழர்க்கு அழைப்பு
தமிழரெல்லாம் தமிழரையே சார்தல் வேண்டும்
தமிழரல்லார் தமைச்சார்தல் தீமை செய்யும்!
தமிழர்க்குத் தமிழர் தாம் இடர்செய் தாலும்
தமிழர்பொது நலமெண்ணிப் பொறுக்க வேண்டும
தமிழரெல்லாம் தமிழரன்றோ! தமிழர் அல்லார்
தமிழரல்லார் என்பதிலும் ஐய முண்டோ?
தமிழர்க்குத் தமிழரல்லார் இதுவரைக்கும்
தமைமறந்தும் ஒரு நன்மை நினைத்த துண்டோ?
தமிழனொரு தமிழனுக்குத் தீமை செய்தால்
தனிமுறையிற் செய்ததென அதைம றந்து
தமிழரது பொதுநலத்துக் குயிருந் தந்து
தமிழரது பண்பை நிலைநிறுத்த வேண்டும்,
தமிழனுக்குத் தனிமுறையில் செய்த தீமை
தமிழர்க்குச் செய்ததென நினைத்தல் நன்றா?
தமிழரெலாம் ஒன்றுபடத் தக்க நேரம்.
தமிழரிதை மறப்பாரேல் இனமேசாகும்?
தமிழரெல்லாம் தமிழருக்குக் துணையாய் நிற்க,
தமிழ் கொன்று தமிழினத்தை ஈடழிக்கத்
தமிழரல்லார் மூக்சுவிடா துழைக்கின்றார்கள்,
தமிழருக்குத் தலைவரெனச் சொல்வார் தாமும்;
தமிழ்மாய்க்கக் காசுபெறத் துடிக்கின்றார்கள்.
தமிழ்மாய்க்கக் கூலிதரச் சிலரும் உள்ளார்,
தமிழ்கொல்லும் தலைவர்களைக் காணும் தீய
தலைமுறையும் இதுவாகும் ஒன்று சேர்க!
bharathidasan07- பாவேந்தர் பாரதிதாசன் (தமிழுக்கு அமுதென்று பேர்)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்