எல்லா நாளும் பொன்னாளே! – புலவர்மணி இரா.இளங்குமரன்
ஞாயி றன்று பிறந்தவனே
நன்மை எல்லாம் அடைவாயே
திங்க ளன்று பிறந்தவனே
திறமை பலவும் பெறுவாயே
செவ்வாய் அன்று பிறந்தவனே
செல்வச் செழிப்பில் வாழ்வாயே
புதனாம் நாளில் பிறந்தவனே
புகழில் சிறந்து வாழ்வாயே
வியாழ னன்று பிறந்தவனே
விளங்கும் அறிவில் உயர்வாயே
வெள்ளி யன்று பிறந்தவனே
வெற்றி யாவும் பெறுவாயே
சனியாம் கிழமை பிறந்தவனே
சலியா உறுதி அடைவாயே
எந்த நாளில் பிறந்தாலும்
எந்தக் குறையும் வருவதில்லை.
எல்லாநாளும் நன்னாளே
எவர்க்கும் ஏற்ற பொன்னாளே
இயற்கை தந்த நாள்களிலே
எவரே குறைகள் காண்பதுவே.
- புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரன்
Comments
Post a Comment