தமிழ்பேசி நாடுக நாளும் நயம் – சந்தர் சுப்பிரமணியன்
இலக்குவனார் திருவள்ளுவன் 26 April 2015 No Comment தமிழ் அந்தாதி இனிக்கும் விருந்தாகி இன்சுவைத் தேனாய் கனிக்குள் அமுதாய் கவியாய் – மனத்திடை ஆடிடும் காரிகையாய் ஆகும் தமிழ்பேசி நாடுக நாளும் நயம் (01) நயமாய் சொற்புனைந்து நல்கி விருத்த மயமாய் விளைவித்தான் விந்தை – அயமென வீழும்நம் கம்பன்தன் பாடல், தமிழ்ச்சுவை வாழப் பிறந்த வளம் (02) (அயம் – சுனை) வளமாய்த் தமிழ்பேசி, வார்த்தைகொண்(டு) ஆட்டக் களத்தே களித்தாடு; காணும் வளத்தால் பயின்று தமிழ்நன்கு பாநூறு பாடி முயன்றுயர்வாய் மேலே முனைந்து (03) முனைந்தவன் நெய்தமுழு வேதக் குறிஞ்சி புனைந்தவள் கொண்டாள் பெருமை – குணங்கொள சொல்லில் மருதென முப்பாலைக் கண்டதுமே முல்லைச் சிரிப்பாய் முகம் (04) வேதக்குறிஞ்சி – அரிதிற் கிடைத்த படைப்பு (உருவகம்) மருது – மருந்து (ஐவகை நிலமும் வருமாறு எழுதப்பட்ட பாடல்) முகத்திலக வாசனையாம் மூவிதமாம் எங்கும் புகழ்மணக்கும் ஓரணங்காம் பாரில் – மிகப்பல சீர்கொள் மொழியாம் சினந்திடின் சீறிடும் கூர்வாளாம் செந்தமிழே கூறு (05) (தமிழ்த்தாய் வாழ...