ilakkuvanarin padaippumanikal 51 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 51. அன்று சாதி கிடையாது
இலக்குவனாரின் படைப்பு மணிகள் 51. அன்று சாதி கிடையாது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 24, 2011
உருவு, நிறுத்த காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு திரு என
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.”
பிறப்பு, ஓழுக்கம், ஆண்மை, வயது, வடிவம், காதல் உணர்ச்சி, நிறை, அருள், அறிவுடைமை, திரு எனும் பத்திலும் இருவரும் ஒத்திருக்க வேண்டும். பிறப்பு என்பது நல்ல குடியில் பிறத்தலாகும். குடி வேறு சாதிவேறு. அன்று சாதி கிடையாது. ஒவ்வொரு குடிக்கு ஒவ்வொரு பண்பு இருக்கலாம். அக்குடிப் பிறப்பால் ஒழுக்கம் உருவாகும். ஆதலின் அதனை அடுத்துக் குடிமையையும் வைத்தார்.”ஒழுக்கமுடைமை குடிமை” என்பது வள்ளுவர் வாய்மொழி. வள்ளுவர் காலத்திலும் ஓழுக்கம் உடைமையே நல்ல குடிப்பிறப்பின் அடையாளமாகக் கருதப்பட்டு வத்துள்ளது. ’ ஆண்மை ஆணுக்கு உரியதன்றோ? பெண்ணுக்கு எவ்வாறு பொருந்தும் எனக் கருதலாம். வலிமை இரு சாரார்க்கும் வேண்டியதொன்று. உள்ள வலிமை, உடல் வலிமை சூழ்நிலைக்கு ஏற்பத் தம்மையும் பிறரையும் ஆளும் தன்மை இருந்தாலன்றி உலக வாழ்வுப் போரில் வெற்றிபெற இயலாது. ஆகவே ஆண்மையிலும் இருசாராரும் ஒத்திருத்தல் வேண்டும். காதலின்பத்துக்கும் ஒத்த ஆண்மையினராய் இருத்தலே சிறப்புடைத்து. அங்ஙனம் இன்மையால் திருமணங்களில் சில முறிவுக்குரித்தாகி இல்லற வாழ்வு துன்பக் களனாக மாறிவிடுகின்றது.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:160)
Comments
Post a Comment