இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 22, 2011
வடவர்க்குத் திருமணம் என்பது புதல்வரைப் பெறுவதற்காகவே. ஆண் பெண் சேர்க்கையால் புதல்வன் பிறத்தல் வேண்டும். ஆதலின் காதலை அடிப்படையாகக் கொள்ளவில்லை. தமிழர்க்கு மணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பாக நிகழவேண்டிய வாழ்வின் இன்பக்கூறுகளுள் ஒன்று. வாழ்வின் தலையாய இன்பம் அதுவே என்று கருதினர். ஆதலின் அதனை இன்பம் என்றே அழைத்தனர். தொல்காப்பியரும் இவ் வின்பத்துக்கு முதன்மை கொடுத்து, “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு” என்று கூறினார். திருமண இன்பம் தலையாய இன்பம்; அது காதல் நெறியில்தான் அடையப் பெறல் வேண்டும் என்பதே தொல்காப்பியர் துணிபு. காதல் எவ்வாறு உண்டாகும். என்பதைப் பின்வரும் நூற்பாவால் கூறுகின்றார்.
“ஒன்றே வேறே என்று இருபால் வயின்
ஓன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோள் ஆயினும் கடிவரை இன்றே.”"
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:157)
Comments
Post a Comment